முன்னாள் டிக்டாக் பிரபலம்... இந்நாள் இணைய உலக இம்சை... திருச்சி சாதனா. அவ்வப்போது ஏதாவது ஒரு கண்டண்ட் பிடித்து அதை வைத்து வீடியோ போட்டு, தனது சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்துவதில் சதனாவுக்கு நிகர் சாதனா தான். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது, இரு நாள் யூடியூப் நேரலையில் வந்து தன் ஃபேன்களுக்கு(ரசிகர்களுக்கு) பதில் அளிப்பது இவரின் வழக்கம். அது போல சமீபத்தில் தனது நேரலை கேள்வி, பதில் செஷனை தொடங்கினார். இதோ அப்போது நடந்த சுவாரஸ்யங்கள்...




‛ஜி.பி.முத்து 248’ என்ற ஐடியில் இருந்து ஒரு தகவல் வந்தது. உடனே அதிர்ந்து போன சாதனா... ‛இவனை பார்த்தாலே பயமா இருக்கு...’ என ஜிபி முத்து பெயரை கேட்டதும் கதறினார். அடுத்த மாத்திரத்தில் சுமித்ரா என்ற பெண், ‛என்ன கிழவி... எப்படி இருக்க...’ என கேட்க, அடுத்த நொடியே.... ‛நல்லா இருக்கேன்... பேத்தி...’ என கலாய்த்தார் சாதனா. ஒரு குசும்பவர் ஒருவர் அப்போது திடீரென உள்ளே வந்து, ‛சாதனா... உன் தொப்பிளை காட்டி ஒரு வீடியோ போடு நல்லா போகும்... ரூ.3 லட்சம் பரிசு கிடைக்கும்...’ என கூறினார். அதை படித்துவிட்டு சிரித்தபடி கடந்துவிட்டார். 




அதன் பின் வந்தது தான் கடுமையான கேள்வி... ‛ரவுடி பேபி சூர்யா மலேசியா செல்லவிருப்பதாகவும்... அவருடன் நீங்களும் செல்லவிருப்பதாக சிக்கா கூறினாரே உண்மையா...’ என்று கேட்க, ‛அந்த ஆளு ஒரு பொய்யன்... அதையெல்லாம் நம்பாதீங்க...’ என பதிலளித்தார் சாதனா. அதன்பின் பல கிளுகிளு பாடல்களை பாடுமாறு ரசிகர்கள் கேட்க, ரசிகர் விருப்பமாக ‛நேத்து ராத்திரியம்மா...’ பாடல்களை பாடினார் சாதனா. இதற்கிடையில் வீடியோ துவங்கும் போதே... அவருக்கு தலையில் ஒரே அரிப்பானது. பேன்கள் தொல்லையில் அவதிப்பட்ட அவர், தலையை விடாமல் சொரிந்து வலி தாங்க முடியாமல் நேரலையில் கதறினார். 


இதோ சாதனாவின் அந்த சொரி வீடியோ...



இன்றைய முக்கியச் செய்திகளை மேலும் படிக்க...