திருச்சி சாதனா என்றாலே கிக் தான். கிக் என்றால்... இளைஞர்களை தலையிலிருந்து கால் வரை கட்டிப்போடும் அளவிலான கிக். கவர்ச்சியென்றாலும் சரி, காமெடி என்றாலும் சரி இறங்கி அடிப்பது சாதனாவின் சாதனை. முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் சாதனா மீடியாவின் நிறுவனர் திருச்சி சாதனா, சமீபத்திய வீடியோ ஹாட் அண்ட் பீட்! 




வழக்கமாக ஏதாவது ஒரு கண்டண்ட் எடுத்து சாதனா வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் அவரது இன்னொரு முகமான நடிப்பு பட்டறையை கொஞ்சம் திறந்திருக்கிறார். இல்லை இல்லை ரொம்பவே திறந்திருக்கிறார். அவர் சில குறும்படங்களில் நடித்து வருவது நாம் அறிந்ததே. அதற்காக தன்னை உலகமகா நடிகையாக அவர் நினைத்திருக்க கூடும். அதனால் தான் பலருக்கு நடிப்பு பயிற்சியும் சொல்லித் தர தொடங்கியுள்ளார்.


Also Read: விஸ்வாசம்-அண்ணாத்த: அச்சு மாறாத ஒரே ட்ரெய்லர்... இயக்குனர் சிவா சொன்ன விளக்கம் இது தான்!


அதிலிருந்து கிடைத்தது தான் இந்த வீடியோ. தனக்கு தெரிந்த ஒரு இளைஞருக்கு நடிப்பு சொல்லித் தரும் அந்த வீடியோவில், ரொமான்ஸ் பார்வை பற்றி கற்றுத்தருகிறார். மழைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சத்தத்தின் அருகே நிற்கும் அவர்கள், ரொமான்ஸிற்கு தயாராகிறார்கள். தலை நிறைய மல்லிகைப்பூ, வேறு விதமான வெட்கம், ஈரமான சுடிதார் என பழைய டிஸ்கோ சாந்தி ஸ்டைலில் நிற்கும் சாதனா, அந்த இளைஞரை ரொமான்ஸாக பார்க்க கூறுகிறார். அவர் சிரமப்பட, பதிலுக்கு இவர் நடித்துக் காட்டுகிறார். 




அப்படியே காதல் ரசம் சொட்ட சொட்ட... . ‛டேய்... நல்லா பண்ணு... டேய்... நல்லா பண்ணு...’ என நடிப்போடு ஒன்றிப் போகிறார் சாதனா. இப்படி ஒரு கலை ரசிகையா... என்ன ஒரு நடிப்பு வெறி... என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுபவர்களும் உண்டு. கண்ணாலே பார்த்து பார்த்துக் கொள்ளாே என்பதைப் போல இருவரும் முடிந்த வரை ரொமான்ஸ் செய்து, மழையை கலையாக்க முயற்சித்தனர். இதோ... அந்த ரொமாண்டிக் வீடியோ...



சாதனாவில் இந்த வீடியோ, மழைக்காலத்தில் வெளியாகி பலரின் ஆதரவைப் பெற்று வருகிறது. ஒரு வீடியோவுக்கு எந்த எல்லைக்கும் போகனுமா என எதிர் விமர்சனங்களும் வராமல் இல்லை.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண