அம்பானி வீட்டில் ஜி.பி.முத்து... ஆச்சரியத்தில் திகைத்துப் போன தருணம்!

அடுத்து அம்பானி ஜி.பி.முத்து தான் என்றும், அதே மாதிரி வீட்டை காட்டுவார் என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர். 

Continues below advertisement

முன்னாள் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்போது சோஷியல் மீடியா பிரபலம். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை திறந்தாலே ஜி.பி.முத்து ஏதாவது ஒன்றில் கட்டாயம் வருவார். மீம்ஸ், கிண்டல், கேலிகளை கடந்து அனைவரையும் ரசிக்க வைக்கும் கலைஞராக மாறி வரும் ஜி.பி.முத்து, விஜய் டிவியின் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று பரவலாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. 

Continues below advertisement

 

இந்நிலையில், மற்றொரு புறம் பிக்பாக்ஸ் 5 நிகழ்ச்சிக்கான ப்ரமோ ஒளிபரப்பு நடந்து வருகிறது. ஜி.பி.முத்து வருவாரா... வரமாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், திடீரென மும்பை பயணத்திற்கு கிளம்பினார் ஜி.பி.முத்து. முதன் முதலாக ரயிலில் மும்பை செல்லும் அனுபவத்தை அவர் வீடியோ வழியே பகிர்ந்து கொண்ட போது, அதுவும் கிண்டல் செய்யப்பட்டு ட்ரோல் ஆக்கப்பட்டது. வழக்கம் போல அதை ஜி.பி.முத்து பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் ஓட்டலில் தங்கிய அவர், தன் நண்பர்களுடன் டாக்சி ஒன்றில் மும்பையை சுற்றிப்பார்க்க புறப்பட்டார். கிராமத்திலிருந்து வந்து அவர், அங்கிருந்த பிரமாண்ட கட்டடங்களை கண்டு சிலாகித்தார். அப்போது இந்தியா கேட் சென்ற அவர், அங்கிருந்த புறாக்களை அழைத்தார். ஆனால் அவை மற்ற அனைவரிடமும் பறந்து சென்றன. ஜி.பி.முத்துவிடம் மட்டும் வரவில்லை.


இதைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு இடத்திற்கு புறப்பட்டார். போகும் வழியில் முகேஷ் அம்பானியில் மகள் வீடு மற்றும் முகேஷ் அம்பானியின் வீடுகளை பார்த்த அவர், அவற்றின் உயரத்தை கண்டு திகைத்துப் போனார். எவ்வளவு பெரிய வீடு... என சிலாகித்தார். ஒரு தெருவையே அம்பானி வீடு மறைக்கிறது என்று ஆச்சரியமாக பார்த்தார். பின்னர் தன் நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். அம்பானி வீட்டிற்கு ஜி.பி.முத்து சென்றதும் தற்போது ட்ரோல் செய்யப்படுகிறது. அடுத்து அம்பானி ஜி.பி.முத்து தான் என்றும், அதே மாதிரி வீட்டை காட்டுவார் என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர். 

இதோ ஜி.பி.முத்துவின் அந்த வீடியோ...

நெல்லையில் மாணிக்கமாகவும், மும்பையில் பாட்ஷாவாகவும் ஜி.பி.முத்துவை சித்தரித்து சில மீம்ஸ்களும் அவருக்கே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சிலர் ஜி.பி.முத்து புறாவை அழைத்ததை பின்னால் இருக்கும் பெண்ணை அழைப்பதாக நினைத்து கமெண்ட் போட்டு வருகின்றனர். வழக்கம் போல, ‛செத்தப்பயலே... நாரப்பயலே...’ என திட்டிக் கொண்டிருக்கிறார் ஜி.பி.முத்து!

Continues below advertisement