பிரபல டிக்பாக் பிரபலம் ஜி.பி.முத்து தன் மனைவியோடு சேர்ந்து இணைதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது யூடியூப் பணியால் தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் சங்கடங்கள் குறித்து பதிலளித்துள்ளார். இதோ அவரது மனைவி மற்றும் அவரது பேட்டி...
ஜி.பி.முத்து மனைவி பேட்டி...
‛‛டிக்டாக் செய்யும் போது எனக்கு பிடிக்கவில்லை. என் அண்ணன், தம்பி அனைவருடனும் சண்டை போட்டார். ‛நான் இப்படி தான் இருப்பேன்... உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ’ என உறுதியாக இருந்தார். நாங்கள் சொன்ன எதையும் அவர் கேட்டவில்லை. நானும் அப்புறம் விட்டுவிட்டேன். இன்று அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கிறது. அதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. மீன் குழம்பு, சாம்பார் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
7 மாதத்திற்கு முன் என் அண்ணன் இறந்ததில் ரொம்ப உடைந்து போயிட்டார். அழுது அழுது துடித்தார். அவருக்கு எதிரான கமெண்ட் போடும் போது, வீட்டில் அவர்களை திட்டித் தீர்ப்பார். முதலில் நகைக்கடையில் இருந்தார், அதன் பின் மரக்கடை வைத்தார். அப்புறம் அதை விட்டுட்டு டிக்டாக், யூடியூப்க்கு வந்தார். எல்லா தொழிலையும் விட்டுட்டு இதுக்கு வராறேன்னு அவரோடு சண்டை போட்டேன். இந்த தொழிலே வேண்டாம்னு சொன்னேன். அவர் கேட்கல. அவரை அவதூறா பேசுனதுக்காக ரவுடி பேபி சூர்யாவை மட்டும் தான், நேரடியா போன் போட்டு திட்டிருக்கேன். மற்றபடி அவர் விசயத்துல நான் தலையிடுறது இல்ல. எனக்கு அவர் மீது ரொம்ப நம்பிக்கை உண்டு. அவர் வெளியில் காட்டிக்கிற மாதிரி, நிஜத்துல இருக்கமாட்டாரு.
இவர் சோஷியல் மீடியாவில் வந்த பின், எங்கள் குடும்பத்துடனான பேச்சு வார்த்தை முற்றிலும் நின்று போனது. அவருக்கு வரும் கமெண்டுகள், அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் பேச்சு வார்த்தையை நிறுத்திவிட்டார்கள்,’’
என்று ஜி.பி.முத்து மனைவி கூறினார். தொடர்ந்து ஜி.பி.முத்து அளித்த பேட்டி இதோ...
‛‛என் மனைவியை அழகா இருக்கானு கமெண்ட் போடுறான். பாட்டினு போடுறான். என் மகளை கொள்ளு பேத்தினு போடுறான். அப்புறம் எனக்கு கோபம் வராதா? அதனால தான் திட்டி தீர்க்குறேன். என் பொண்டாட்டியை, நம்ம பொண்டாட்டினு போடுறான்; அதை பார்க்கும் போது கோபம் தானே வரும். எனக்கு 40 வயசு தான் ஆகுது. அதுக்குள்ள 52 வயசு, அது இதுனு கிளப்பி விடுறாங்க. பல இடங்களில் உடஞ்சு போய் உட்கார்ந்திருக்கான். பல பொது நிகழ்ச்சிகளில் கேவலமா நினைப்பாங்க. இப்போது என்னுடன் இருக்கும் ஆனந்தே, இதற்கு முன் என்னை பைக்கில் ஏற்றிச் செல்ல மாட்டான்; நம்மையும் கேலி பண்ணுவாங்க என அவன் நினைத்திருந்தான். ஆனால், அந்த கேலிகளை நான் பொருட்படுத்தவில்லை. அது தான், இன்று எனக்கு இவ்வளவு தந்திருக்கிறது.
எதுவுமே வேண்டாம் என நிறுத்திவிடலாம் என ஒரு கட்டத்தில் தோன்றியது. ஒரு 5 நாள் தான், தள்ளி வைப்பேன். அப்புறம் நானே ஆட வந்திருவேன். என்னால அதை விட முடியல. அது மாதிரி ஒரு கிறுக்கு பிடிச்சிருச்சு. என் ஊர்ல இன்னும் சில பேர் கோமாளி, லூசுப்பயனு தான் என்னை நினைக்கிறாங்க. அதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா, என்னை பேட்டி எடுக்க நீங்க வருவீங்களா? அதையெல்லாம் கண்டுக்காம நாம கடந்து போயிடனும். செல்போன் இல்லாமல் என்னால இருக்க முடியாது; அதனால தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூட நான் போகலை. நிறைய பேர் என்னை திட்டிருக்காங்க. என்னை திட்டினால் கூட பரவாயில்லை, என் குழந்தைகளையும் திட்டுவாங்க. அவங்கெல்லாம் மனுஷங்களே இல்லை. நான் சீரியஸ் ஆக திட்டுவதை கூட காமெடியா மாத்திடுறாங்க. என்ன செய்யுறதுனே தெரியல,’’
என்று அந்த பேட்டியில் ஜி.பி.முத்து கூறியுள்ளார்.