Share Market opened : இந்திய பங்குச்சந்தை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 309.7 புள்ளிகள் குறைந்து 59,805.78 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 89.8 புள்ளிகள் குறைந்து 17,824.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்த இரண்டாவது நாளாக பங்குச்சந்தையானது சரிவில் தொடங்குவதால் முதலீட்டாளர்கள் மத்தியல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவலை
நேற்யை நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
லாபம்-நஷ்டம்
ஹின்டல்கோ, எச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், சன் பார்மா, எச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, லார்சன், பிரிட்டானியா, பிபிசிஎல், கோடக் மகேந்திரா, டெட்டன் கம்பெணி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
பாரதி எர்டெல், சிப்ளா, அப்போலோ மருத்துவமனை, ரிலையன்ஸ், ஓன்ஜிசி, எம்எம், பஜாஜ் ஆட்டோ, நெஸ்டீலே, ஏசியன் பையின்ட்ஸ், ஹிரோ மோட்டோகோர்ப், கிராசிம், என்டிபிசி, கோல் இந்தியா, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 81.68 ரூபாயாக உள்ளது.