துணிவு படத்தின் மூன்றாம் சிங்கிளின் பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள “சில்லா சில்லா”பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பெற்றது.

அதன் பின்னர், “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்தார். கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, அத்துடன் சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இந்த பாடல் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல் வரிகளை வெளியிட்ட துணிவு படக்குழுவினர்

பொதுவாகவே ஒரு படம் வெளியாகும் முன்னர், பலவிதமான ப்ரோமோஷன் வேலைகள் நடக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களின் படத்திற்காக  பயங்கரமான ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளனர்.

துணிவு படம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், அஜித்தின் புது லுக் ஸ்டில்ஸ் மற்றும் இதுபோன்ற அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில், மூன்றாம் சிங்கிள் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அதற்கு முன்னரே அந்த பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் , “ இதுதான் கேங்ஸ்டா பாடலின் வரிகள். இதை படியுங்கள். மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வரும் 25 ஆம் தேதி இப்பாடலை கேட்டு மகிழுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிலர்,  “இந்த பாட்டிற்கு ஓவர் பில்ட்-அப் கொடுத்து வராங்க..” என்றெல்லாம் கமென்ட்ஸ் செய்துள்ளனர்.

போனி கபூர் வெளியிட்ட பதிவில் உள்ள பாடல் வரிகள் :

சீண்டுனா சிரிப்பவன்

சுயவழி நடப்பவன்

சரித்திரம் படைப்பவன் HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு

பணிஞ்சுபோற துணிவுகொண்டு பயணம் செய்யும் குணம்கொண்டவன் HE'S LIKE A GANGSTA, HELL, HE'S A GANGSTA

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்HE'S A GANGSTA

அநீதி கண்டு பொங்கி எழுபவன்

HE'S A GANGSTA

பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்

கூட GANGSTA

தாலாட்டும் தாய் சீறும்போதும்

WHO THE WHO THE, GANGSTA 

I SAID, WHO THE GANGSTA COM'ON COM'ON சொல்லுWHO THE GANGSTA 

HA HA TELL ME WHO THE GANGSTA 

நம்பிக்கை இழக்காமல்

போர்த்தொடுப்பவன் IT'S HIM IT'S HIM (GANGSTA)

கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன்

IT'S HIM IT'S HIM. (I SAID WHO THE GANGISA) வன்முறை தெரித்தும் கண்ணில்

அமைதி கொண்டவன் IT'S HIM ITS HIM. (I SAID, WHO THE GANGSTA) வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும்

இறங்குனா HE'S A GANGSTAAA..

GANGSTA, GANGSTA...NANANAA..

துணிஞ்சா வெற்றி நமதே துணிஞ்சா வெற்றி நமதே

வா பதிலடிதான் தெரியுமடா

உனக்கு சம்பவம் இருக்கு

பார் முடிவில யார். பதிலடிதான்

இனிமே பிரச்சனை எதுக்கு அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு நடய ஒடச்சு பயத்த செரிச்சு' ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள எதிர்த்து நிக்கட்டும்.

IAM GANGSTA