தமிழ் சினிமாவில் கவர்ச்சி குயினாக ஒரு சமயத்தில் வலம் வந்த நடிகை மும்தாஜ். டி. ராஜேந்தர் இயக்கத்தில் 'மோனிஷா என் மோனலிசா' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். மல மல மருதமலை மற்றும் கட்டிப்புடி கட்டிப்புடிடா என இரண்டே பாடல்களின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நடிகை மும்தாஜ் மெக்கா மற்றும் மதினா யாத்திரை மேற்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 



வசீகரமான தோற்றம், அம்சமான உடற்கட்டு கொண்டு ரசிகர்களை வசப்படுத்திய மும்தாஜ் மிட்டா மிராசு, மலபார் போலீஸ், சாக்லேட், பட்ஜெட் பத்மநாபன், குஷி, ஏழுமலை, ஏய், வீராசாமி என பிரபு, சத்யராஜ், டி. ராஜேந்தர், அர்ஜுன், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவரின் குத்தாட்டத்தில் விழுந்த ரசிகர்கள் தூங்க முடியாமல் தவிக்கும் அளவிற்கு அவர்களை வசப்படுத்தி வைத்தவர் மும்தாஜ். பிறகு படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த மும்தாஜ் ரீ என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம். பிக் பாஸ் வீட்டில் மும்தாஜ் இருந்த சீசன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரேக் எடுத்த மும்தாஜுக்கு பிக் பாஸ் வாய்ப்பு மீண்டும் அவரை ரசிகர்களுடன் கனெக்ட் செய்து கொள்ள உதவியாக இருந்தது. 


 







சினிமாவில் இருந்து விலகி மும்தாஜ் தற்போது இஸ்லாமியர்களின் தலையாய கடமையான மெக்கா மற்றும் மதினாவிற்கு புனித யாத்திரைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார் மும்தாஜ். அவர் வெளியிட வீடியோவில் நான் தற்போது மெக்காவில் இருக்கிறேன். இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடமான மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டதில் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். நான் இங்கு அனைவருக்காகவும் பிரார்த்தித்து கொள்கிறேன். இருப்பினும் எனக்கு மெசேஜ் மூலமாகவும் கமெண்ட் மூலமாகவும் ஏராளமானோர் அவர்களின் வேண்டுதல்களை அனுப்பி வருகிறார்கள். உங்களுடைய பிரார்த்தனைகளை அனுப்புங்கள். அல்லாவின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.  என்னுடைய மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார். 


மேலும் அவரின் பிராத்தனையில் "அல்லா எனது ஆவையும் ஏற்றுக்கொள்ளுங்கள், எங்கள் அனைவருக்கும் மனநிறைவான ஒரு வாழ்க்கையை தாருங்கள். எங்கள் அனைவரின் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னியுங்கள்" என மனமுருகி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொண்டார் நடிகை மும்தாஜ்.