துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் அஜித் ‘மாஸ்’ ஹீரோவாக நடித்துள்ள படம் துணிவு. இதனை போனி கபூர் இணைந்து வழங்குகிறார். நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இப்படத்தை டைரக்டு செய்கிறார். வலிமை படத்தில் இணைந்த எச். வினோத், அஜித் மற்றும் போனி கபூர் இப்படத்திலும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
வலிமையை அடுத்து, நடிகர் அஜித் நடித்துள்ள படம் இது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில், படத்தின் ‘பர்ஸ்ட்-லுக்’ வெளியாகி வைரலானது. இதில், நடிகர் அஜித் வெள்ளைத்தாடியுடனும் நவீன துப்பாக்கியுடனும் உள்ள போட்டோ இடம் பெற்றிருந்தது. பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வெறியை தூண்டிய அதே நேரத்தில், படத்தின் செகண்ட் லுக் வெளியானது. முன்னர் ரிலீசானதவை விட இந்த போட்டோ எல்லோருக்கும் பிடித்துப் போனது. இதனால், ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பயில்வான் ரங்கநாதன் ரிவ்யூ:
கோலிவுட்டின் காமெடி நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது, படங்களுக்கு விமர்சனங்கள் கொடுப்பதையும், சர்ச்சைக்குரிய வைகையில் சினிமா குறித்த விஷயங்களையும் பேசி வருகிறார். இதனால், தமிழ் மக்களின் மத்தியில் மிகப் பிரபலமாக மாறிவிட்டார். இவர் தற்போது, துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பேசியுள்ளார்.
படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள “நோ கட்ஸ் நோ க்ளோரி” என்ற ஆங்கில வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும், தனக்கென வைக்கப்பட்ட ரசிகர் மன்றத்தை காலி செய்த ஒரே நடிகர் அஜித் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிற நடிகர்கள் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் இன்று வரை, படத்தின் காட்சிகள் எதுவும் லீக் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். இது ‘வாரிசு படத்தின் மீது இவர் அட்டாக் செய்வதாக இருக்கிறது’ என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், துணிவு பர்ஸ்ட் லுக்கில், வெள்ளைத் தாடியுடன் மாஸாக அஜித் போஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து ஹீரோக்கள் குறித்தும் சர்ச்சைக் கருத்துக்களை கூறும் அவர், அஜித் குறித்து மட்டும் ‘பாசிட்டிவ்’ஆக பேசுவது ஏன்? என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.