தளபதி 68


 வெங்கட் பிரபு இயக்கத்தி நடிகர் விஜய் நடித்து வரும் படம் G.O.A.T. இந்தப் படத்தில் பிரஷாந்த் , பிரபுதேவா, மோகன், சினேகா, பிரேம்ஜீ , வைபவ், மீனாக்‌ஷி செளத்ரி, உள்ளிட்டவர்கள்  நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏ.ஜி எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது . போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 


விஜய் அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டாரு


இந்தப் படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படக்குழு வெளியிட்ட போஸ்டர்கள் இரண்டு வெவ்வேறு வயதினையுடைய விஜய் இடம்பெற்றிருந்தார்கள். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு ஹாலிவுட் படங்களின் கதையை இந்தப் படத்தின் கதையோடு ரசிகர்கள்  ஒப்பிட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டின் வில் ஸ்மித்  நடித்த தி ஜெமினி மேன், ஆஃப்டர் அர்த் உள்ளிட்டப் படங்களின் கதையை இந்தப் படத்தோடு ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.


எக்ஸ் தளத்தில் ஒருவர்  ஹாலிவுட் படங்களின் ரீமேக்களில் நடிப்பதற்கு விஜய் தகுந்த நடிகர் கிடையாது என்றும் விஜய் நடித்த தெலுங்கு படங்களே அவருக்கு நல்ல வெற்றியைத் தந்திருக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ஏதாவது ஒரு  நல்ல தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கி அதை எடுத்து முடியுங்கள் என்று அந்த நெட்டிசன் கூறியுள்ளார்.  அப்படி இல்லையென்றால் விஜய் படங்களில் இருக்கும் வழக்கமான விஷயங்களை தவிர்த்துவிட்டு லியோ மாதிரி அரைவேக்காட்டுத் தனமாக இல்லாமல் ஒரு படத்தை எடுங்கள் என்று அந்த நபர் கூறியுள்ளார்.


கூலாக ரிப்ளை செய்த வெங்கட் பிரபு


இதற்கு செம கூலாக வெங்கட் பிரபு தரப்பில் இருந்து பதில் அளிக்கப் பட்டுள்ளது. “ சாரி ப்ரோ உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறேன் “ என்று வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். 






வைரலாகும் வெங்கட் பிரபு பேட்டி


இதே சமயத்தில் வெங்கட் பிரபுவின் பழைய நேர்காணல் ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் அவர் ஒரு  வெளிநாட்டில் ஒரு ஸ்பைடர் மேன் படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஸ்டார் ஹீரோ தேவையில்லை ஆனால் அதே மாதிரியான ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இங்கு ஒருவர் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஸ்டார் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லையென்றால் அந்த படத்தை யாரும் பார்க்க வரமாட்டார்கள். அந்த படத்திற்கு பணம் முதலீடு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். தளபதியை வைத்து அவர் இயக்கும் படம் நிச்சயமாக ஒரு புதுமையான முயற்சியாக இருக்கும் என்று அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.