விடாமுயற்சி:


நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியானது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென கைவிடப்பட்டது.


அதனை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி என்னும் படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அஜித் - த்ரிஷா தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், அர்ஜுன் உள்ளிட்டோரும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் இருந்து அப்டேட் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. 


 






இச்சூழலில், துபாயில் குடும்பத்துடன் இருக்கும் நடிகர் அஜித்குமார் அங்கு படகில் பயணம் செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அஜித்தை பார்த்து ‘தல’ என்று அழைத்தனர். இதனைக் கண்ட அஜித் அவர்களை பார்த்து பதிலுக்கு கை அசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 


மேலும் படிக்க: Shine Tom Chacko: காதலியை கரம்பிடிக்கும் பீஸ்ட் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. ரசிகர்கள் வாழ்த்து மழை!


 


மேலும் படிக்க: Captain Miller: தனுஷ்- சிவராஜ் குமார் இணைந்து மிரட்டும் கோரனாரு பாடல் ரிலீஸ்! உற்சாகத்தில் கேப்டன் மில்லர் ரசிகர்கள்!