நாள்: 03.01.2024 - புதன்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


மாலை 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். உடனிருப்பவர்களின் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமாக சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வுகளின்ன் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம்


வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். அசதி குறையும் நாள்.


சிம்மம்


சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுதால் முன்னேற்றம் உண்டாகும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.


கன்னி


சுய தொழில் நிமிர்த்தமான எண்ணங்கள் மேம்படும்.  உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் அகலும். அமைதி நிறைந்த நாள்.


துலாம்


புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயரதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொழிலில் சிறு சிறு மாறுதல்களை செய்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.


விருச்சிகம்:


வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். எண்ணிய சில பணிகள் திட்டமிட்ட விதத்தில் நிறைவுபெறும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.


தனுசு


மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் மன அமைதி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியான தொழில் சார்ந்த வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் பொறுப்புகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.


மகரம்


உத்தியோகப் பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்னல்கள் குறையும் நாள்.


கும்பம்


எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும்.  முயற்சி மேம்படும் நாள்.


மீனம்


எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாகும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். ஊக்கம் நிறைந்த நாள்.