பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த வார ஓடிடி தளங்களில் வெளியான தமிழ்ப் படங்கள் பற்றி கட்டுரையில் காணலாம். 


ஓடிடி தளங்கள் வளர்ச்சி 


இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உலக மொழிகளில் வெளியான படங்கள், வெப் தொடர்கள், சீரியல்கள் என அனைத்தையும் இருக்கின்ற இடத்திலேயே  கண்டு விடலாம் என்பதால் நாளுக்கு நாள் இதன் வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர். தொலைக்காட்சி சேனல்களும் தங்களுக்கென பிரத்யேக ஓடிடி தளங்களை கொண்டுள்ளது. 


அதேசமயம் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்,  ஆஹா, சோனி லைவ், ஜீ5  என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் உள்ளூர் படம் முதல் உலக படம் வரை வெளியிட்டு வருகிறது. இதில் வாரம் வாரம் பல புதிய படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படங்கள் பற்றி காணலாம். 




  • பிச்சைக்காரன் 2




விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்து, பாடல் எழுதி என அனைத்து பணிகளையும் மேற்கொண்ட படம் ‘பிச்சைக்காரன் 2’ . இந்த படத்தில் காவ்யா தாப்பர், தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி, யோகி பாபு, ராதா ரவி, மோகன் ராமன், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஷீலா, சாய் தீனா, மாதேஷ், ஷிவன்யா, கதிர், பிரியதர்ஷினி ராஜ்குமார், மன்சூர் அலிகான், ஃபவாஸ் ஜயானி, ஷிவாங்கி வர்மா என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 




  • கழுவேத்தி மூர்க்கன்




கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ்பிரதாப், முனிஷ்காந்த், யார்கண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘கழுவேற்றி மூர்க்கன்’. டி.இமான் இசையமைத்த இப்படம் கடந்த மே 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 



  • கிசி கா பாய் கிசி கி ஜான் (இந்தி)


இந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம், ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’. இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 




  • கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (மலையாளம்)




டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த படமானது ஒரு குழப்பமான கொலை வழக்கை எதிர்பாராத திருப்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. லால் மற்றும் அஜூ வர்கீஸ் இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.




  • காசேதான் கடவுளடா




ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு, கருணாகரன், தலைவாசல் விஜய், ஊர்வசி, சிவாங்கி என பலரும் நடித்த படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த படம் தியேட்டரில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் சன் நெக்ட் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • இதேபோல் தீராக்காதல் (நெட் பிளிக்ஸ்), குலசாமி (டெண்ட் கொட்டா), கருங்காப்பியம் (டெண்ட் கொட்டா) ஆகிய படங்களும் இந்த வாரம் ரீலிசாகிறது.