தீபாவளி ரிலீஸ் படங்களாக சென்ற வாரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் திரைப்படம் வெளியானது. இவ்விரண்டு படங்களில் ஜப்பான் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக இந்த வார வெள்ளிக்கிழமை (நவம்பர் 24ம்) தேதி என்னென்ன படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம் :


 



துருவ நட்சத்திரம் : 


கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், விநாயகன், ரிது வர்மா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


80ஸ் பில்டப் : 


நடிகர் சந்தானம்  கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் குலேபகாவலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் கல்யாண். இப்படத்தில் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ், தங்கதுரை, முனீஸ் காந்த் மற்றும் பல காமெடி நடிகர்கள் நடிக்க மறைந்த நடிகர்கள் மயில்சாமி மற்றும் மனோபாலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த காமெடி திரைப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. 


 



அவள் பெயர் ரஜ்னி :


நவரசா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதா பிரமோத், சைஜு குருப், ரெபா மோனிகா ஜான், கருணாகரன், ஷான் ரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.  


எமர்ஜென்சி :


கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தான் எமர்ஜென்சி அல்லது மிசா என அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் எமர்ஜென்சி. இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. 


சில நொடிகள் : 


எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே நிறுவனத்தின் தயாரிப்பில் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'சில நொடிகள்' திரைப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.