Thiruchitrambalam Final Audio mix is ready : தனுஷ் - மித்ரன் ஜோடி தயாராக உள்ளது - ஆகஸ்ட் 18 "திருச்சிற்றம்பலம்" படம் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும் "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் விரைவில் வெளியாக தயாராக உள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "திருச்சிற்றம்பலம்" திரைப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் ஒரு புதிய தகவலை தற்போது பகிர்ந்துள்ளார்.
பைனல் ஆடியோ மிக்ஸ் ரெடி:
திருச்சிற்றம்பலம் படத்தை திரையரங்குகளில் வெளியிட தேவையான அனைத்து பைனல் ஆடியோ மிக்ஸ் கொண்ட பதிவுகள் தற்போது முழுமையாக முடிவடைந்து விட்டது என்பதை தனது ட்விட்டர் பக்கம் மூலம் திரை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஜவஹர். நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் ஆடியோ ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி :
"திருச்சிற்றம்பலம்" திரைப்படத்தின் பாடல்கள் நிச்சயமாக சூப்பர் ஹிட் பாடல்களாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் பதிப்பு உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளுக்கு அனுப்பப்படும்.
குடும்ப கதை:
ஒரு பழமையான, எளிமையான வாழ்க்கையை வாழும் ஒரு கண்டிப்பான தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் சிக்கலான உறவை பற்றின ஒரு கதை நிச்சயம் ரசிகர்களின் மனதை சென்றடையும். கண்டிப்பான தந்தையாக நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் மகனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பாரதிராஜா தாத்தா கதாபாத்திரத்திலும் நடிகை நித்யா மேனன் தனுஷின் தோழியாகவும் நடித்துள்ளனர். பிரியா பவனி ஷங்கர் மற்றும் ராஷி கன்னா தானுதின் காதலிகளாக நடிக்கின்றனர். இப்படம் அன்பு, குடும்பம், நட்பு, காதல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான குடும்ப படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மித்ரன் ஜவஹர் - தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் :
மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை தொடர்ந்து இந்த ஜோடியின் இணைப்பில் வெளியாக உள்ள நான்காவது திரைப்படம் "திருச்சிற்றம்பலம்". சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை விநியோகம் செய்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்