தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏற்கனவே "திருச்சிற்றம்பலம்" என பெயரிடப்பட்டது. இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி வருகின்றனர். 


திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மிக மீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத்துடன் நடிகர் தனுஷ் இணைகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


இந்தநிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஜூலை 1 ம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தன் காரணமாக கடந்த ஒரு காலமாக படக்குழு படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகிறது. 






அந்த வரிசையில், இந்த படத்தில் நடிகை ராஷிகன்னா அனுஷா கதாபாத்திரத்திலும், நடிகை பிரியா பவானி சங்கர் ரஞ்சனி கதாபாத்திரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும், இயக்குநர் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் சன் பிக்சர்ஸ் அறிமுகம் செய்தது. 






தற்போது, நடிகை நித்யா மேனன் அந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு சோபனா என்னும் பெஸ்ட் பிரண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமத்து படமாக இருக்கும் என்றும், சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாகவும் இயக்கி வருகிறது என்றும் தகவல் வெளியாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண