திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர்,ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. 


பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம் 






மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.  இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நன்றாக வசூல் செய்துள்ளது.


வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை 


தனுஷின் திருசிற்றம்பலம் ஆஸ்திரேலியாவில் 1.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 13,000 த்திற்கு மேலாக திருச்சிற்றம்பலம் படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம்  2022 ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில்  ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.






முன்னதாக அஜித்குமார் நடித்த ‘வலிமை’ திரைப்படம்  (2022 ஆம் ஆண்டில்) இந்த இரு நாடுகளில் அதிகம் வசூல் செய்த 3 ஆவது படம் என்ற பெயரை பிடித்திருந்தது. இந்த இடத்தை தற்போது ‘ திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பிடித்துள்ளது. 


ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் வசூலை பொருத்தவரை கமலின் விக்ரம் படமும் விஜயின் பீஸ்ட் படமும் முதல் இரண்டு இடங்களை நிரப்பியுள்ளது. தமிழ்நாடில் சுமார்  65 கோடியை வசூலித்துள்ள திருச்சிற்றம்பலம் கூடிய விரைவில் 100 கோடி ரூபாயை வசூல் செய்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Nithya Menon: ‛என்னை தாய் கிழவின்னு கூப்பிடாதீங்க...’ ரசிகர்களிடம் கெஞ்சிய நித்யா மேனன்


Indian 2 : இந்தியன் 2 படத்திற்கு ஆயத்தமாகும் உலக நாயகன்.. ஹாலிவுட் ஆர்டிஸ்டை சந்தித்த கமல்