உலக நாயகன் கமல் தனது பழைய நண்பர் மைக்கெல் வெஸ்ட்மோரை இந்தியன் 2 ஷூட்டிகிற்கு ஆயத்தமாக சந்திதுள்ளார். இதற்கு முன்பு மைக்கெல் வெஸ்ட்மோர் தசாவதாரம், அவ்வை சண்முகி ஆகிய படங்களில் கமல் ஹாசனுக்கு மேக்-அப் போட்டுள்ளார். இந்த இருபடங்களிலுமே, கமலின் மேக்-அப் வேற லெவலில் அமைந்து இருக்கும் அதற்கு காரணம் ஆஸ்கார் பெற்ற ஹாலிவுட் ஒப்பணையாளர் மைக்கெல்தான். முக்கியமாக வயதான வேடத்தில் நடித்த கமலின் மேக்-அப் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
கமல் ஹாசன் மைக்கெலிடம், ஸ்டார் ட்ரெக் படத்தின் செட்டில் 30 நாட்களுக்கு ஒப்பணை கலையை கற்றுக்கொண்டார் கமல். கமல் ஆல் இன் ஆல் அழகுராஜா என்பது தெரிந்த விஷயம்தான் ஆனால் ஒரு கலையை கற்றுக்கொள்ள இவர் இவ்வளவு மெனக்கெடுவார் என்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.
இப்போது பிரம்மாண்ட டைரக்டரின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல் ஹாசன் தனது பழைய நண்பரை சந்திதுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது. இப்படத்தில் திருமணத்திற்கு பிறகு காஜல் மீண்டும் தன் நடிப்பை துவங்கவுள்ளார். இதுபோக, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.
எல்லாப்படங்களிலும் புக் ஆகி வரும் அனிருத் இப்படத்திலும் இசையமைப்பார். இப்படமானது லைகா தயாரிப்பில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது