Theri Remake : இந்தியில் ரீமேக்காகும் தெறி படம்... இவர்தான் தயாரிப்பாளாரா? வெளியான செம அப்டேட்...!

விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

Theri Remake : விஜய் நடிப்பில்  வெளியான 'தெறி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

இயக்குனர் அட்லீ:

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் தொடங்கி, இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளவர் இயக்குநர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக  அவர் அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கி டாப் கமர்ஷியல் இயக்குநராக உருவெடுத்த அட்லீ, நடிகர் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்து பாலிவுட்டில் விரைவில் கால் பதிக்க உள்ளார். 

நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் செப்.7ஆம் தேதி வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன், யோகி பாபு,  பிரியா மணி, சுனில் குரோவர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தெறி ரீமேக்

இந்நிலையில், விஜய் நடிப்பில்  வெளியான 'தெறி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெறி படம், 2016ஆம் ஆண்டில் வெளியாகி ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக வளம் வந்த நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'தெறி பேபி' என்று அவர் சொல்லும் வசங்கள் எல்லாம் அற்புதமாக அமைந்தது.

குறிப்பாக இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பது மட்டுமின்றி, அவருடைய கெத்து மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும். அதேபோல, வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன் படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றார். இவர்களின் காம்போ இன்றுவரை ரசிர்கள் மனதில் மறையாமல் நின்றுள்ளது. இந்த படத்தில் இருக்கும் பாடல் இன்றளவு நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படம் சுமார் ரூ.75 கோடி வசூல் பெற்றுள்ளது. 

இவர்தான் தயாரிப்பாளா?

இந்நிலையில், தெறி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதற்கு அட்லீ தான் தயாரிப்பாளார் என்று பேசப்பட்டு வருகிறது. இவரது தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தான், தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இந்த படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாகவும், அடுத்த ஆண்டு மே மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola