பருத்திவீரன் படத்துக்கு பின் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிராமத்துக்கு நாயகனாக களமிறங்கிய படம் தான் கொம்பன். முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, கார்த்தியின் கெரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது.




இதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தி, மீண்டும் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இப்படம் மூலம் அவர் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார்.


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, இந்த வரிசையில் இப்போது விருமன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.






கார்த்தி, அதிதி‌ ஷங்கர்,சூரி, ஆர்.கே.சுரேஷ், பிகில் பாண்டியம்மாள், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி புரொடக்ஷனில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியானது  விருமன் திரைப்படம்.


 






அதிதி சங்கர் மற்றும் கார்த்தி சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விருமன். அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் கஞ்சாபூகண்ணால மக்களிடையே பெரும்  வரவேற்பு பெற்றது. தற்போது விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கஞ்சா பூ கண்ணால பாடலில் வீடியோ சாங் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் இரண்டு லட்சம் வியுஸ் பெற்று இருக்கிறது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண