நடிகர் விஜய்சேதுபதிக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘கோல்டன் விசா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன் படி இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்த பலருக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடிகர்கள் பார்த்திபன் ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கும் கோல்டன் விசா வழங்ப்பட்டிருக்கிறது.