சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என 'டாக்டர்' படத்தின் ராசியான ஜோடி மீண்டும் சேர அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம்தான் 'டான்'. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பளார். முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறி விட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ, FDFS கொண்டாட்டம் என தியேட்டர்கள் களைகட்டி உள்ளன. இன்று முதல்நாள் என்றாலும், டான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இதுவரை குவிந்து வருகின்றன. இந்த வருடம் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு எந்த திரைப்படமும் அதிகபட்ச பசிட்டுவ விமர்சனங்களை பெற்றதில்லை. கல்லூரிக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள்.
தமிழிலும் தெலுங்கிலும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பல பேட்டிகள் கொடுத்து வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் பல யூட்யூப் சானல்களில் பேட்டி அளித்திருந்தார். அந்த வகையில் ஒரு தனியார் யூட்யூப் சானாலுக்கு அளித்த பேட்டியில், தனது பத்து வருட பயணம் குறித்து பேசி இருந்தார்.
பத்து வருட சினிமா வாழ்க்கையை கடந்துவிட்டீர்கள், இனி என்ன செய்யலாம் என்று ஐடியா வைத்துள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, "நாளை என்றும் நம் கையில் இல்லை, நாம் யாவும் தேவன் கை பொம்மைகளே. என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே", என்று எதிர்நீச்சல் திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "பத்து வருட சினிமா வாழ்க்கை அவ்வளவு ஈஸியா இல்ல, நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், நிறைய பேரோட ஆதரவு இல்லாம எதுவும் நடக்கல. அதே அளவுக்கு நிறைய பிரச்சனைகளும் இருந்திருக்கு, பின்னாடி நிறைய வேலைகள் நடந்திருக்கு.
படங்கள் புதுசு புதுசா ரிலீஸ் பண்றது, அதெல்லாம் வேலை, இதுக்கெல்லாம் பின்னாடி ஒன்னு இருக்கு அதுதான் பயணம். அதுலதான் நிறைய பிரச்சனைகள சந்திக்க வேண்டி இருக்கும். அங்க நம்மள கவிழ்க்க சில சதிகள் நடக்கும், நம்மை கீழ இறக்க முயற்சிகள் நடக்கும், அதுக்கு பின்னாடி பல அரசியல் இருக்கு. அதையெல்லாம் நான் என் அம்மா கிட்ட கூட சொன்னதில்ல. என் மனைவிக்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன், சில நண்பர்கள் கிட்ட சொல்லுவேன், ஆனா அது ரொம்ப பெரிய கஷ்டமான விஷயம். அதுக்கெல்லாம் உத்வேகம் தர்றது இந்த மக்கள்தான். இவங்கள சந்தோஷ படுத்துறதுக்காக எதையும் தங்கிக்கலாம்ன்னு தோணும், அவர்களுக்காக இதை பண்ணனும். எப்போவுமே இவங்கள சந்தோஷ படுத்திட்டே இருக்கணும், முடிஞ்சா ஒருநாள் பெருசா இந்த மக்களை பெருமை படுத்தனும்." என்று கூறினார்.