நாள்: 14.05.2022


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை





கௌரி நல்ல நேரம் :




காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


காலை 1.30 மணி முதல் காலை 3 மணி வரை


சூலம் – கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் சிறப்பான நாள். நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று பலன்கள் கலந்து காணப்படும். இன்று மனதில் தெளிவு வேண்டும். வருவதை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆறுதல் அளிக்கும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வது மிகவும் அவசியம்.அதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.மேலும் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெறலாம்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முறையாக திட்டமிடுவதன் மூலம் வளர்ச்சி காணலாம். இன்று ஆற்றலும் உறுதியும் உங்களிடம் நிறைந்திருக்கும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். யோகா மற்றும் தியானம் மூலமும் பலன் பெறலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்பட்டாலும் உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி மூலம் வெற்றி பெறுவீர்கள். பாதைகள் கடினமாக இருந்தாலும் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அமைதியாக இருங்கள். வெற்றி நிச்சயம்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களிடம் ஆன்மீக விழிப்புணர்வு காணப்படும். இதன் மூலம் அமைதியும் உங்கள் எண்ணத்தில் தெளிவும் காணப்படும். உங்கள் வெற்றிக்கு இதுவே முதல் காரணமாக அமையும். இன்றைய நாளை சிறப்பாக்குங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இறை வழிபாடும் ஆன்மீக ஈடுபாடும் இன்று உங்களுக்கு வரமாக அமையும். சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பியதைஅடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான நாள். இன்று உங்கள் மனதில் திருப்தி நிறைந்திருக்கும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, உங்களைச் சுற்றியுள்ளவர்களோடு ஒத்துச் செல்லுங்கள். இன்று ஏழை மற்றும் தேவைப்படுவோருக்கு உணவு அல்லது பணம் அளியுங்கள். இன்றைய நாளை கழிக்க ஏதாவது ஒரு பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, நீங்கள் இன்று உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாகக் கையாளலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண