துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 14  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. 









வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். கர்ணன் மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை தயாரித்த தாணு தயாரிப்பில் வெளியாக தயாராகவுள்ள " நானே வருவேன்" திரைப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநிலத்தில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


 






அதன்படி கடந்த ஜூலை 13 ஆம் தேதி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில், ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனிடையே நானே வருவேன் படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என புதிய இரு போஸ்டர்களோடு  கடந்த வாரம் அப்டேட் வெளியானது. யுவன் பிறந்த நாளன்றும் புது போஸ்டர் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசர் தொடர்பான அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று மாலை 6.40 மணிக்கு சன் டிவின் யூடியூப் பக்கத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். படத்தின் டீசருக்கு தனுஷின் ரசிகர்களும், செல்வராகவன் ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில் இந்த புதிய அப்டேட் மக்களிடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது.