மைக் செட் ஸ்ரீராம் நடிக்கும் நடிகராக அறிமுகமாக படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. 

Continues below advertisement


பிரபல நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோர் தயாரிப்பாளர்களாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றனர். NN pictures சார்பில் இவர்கள் தயாரிக்கும் படத்தில்,  ‘மைக் செட்’ புகழ் ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.




நடிகைகளாக மானசா மற்றும் ரிமி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். மேலும் இதர கதாபாத்திரங்களில் நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தப்படத்தை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். முத்து மூவேந்தர்  ஒளிப்பதிவு  செய்யும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அருள்ராஜ் கென்னடி இசையமைக்கிறார். 




பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். காதல் திரைப்படமாக உருவாகும் இந்தப்படம் ரொமன்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கிறதாம்.