Bigg Boss 6 Tamil: ‛அப்போ அவன்டயே பேசு....’ ரச்சித்தாவை சந்தேகிக்கும் ராபர்ட்!

இதுவரை ரச்சிதாவிற்கும் ராபர்ட்டிற்கும் இடையே அனைத்தும் நன்றாக போய் கொண்டிருந்தது. தற்போது இருவரது உறவில் சண்டை முளைத்துள்ளது

Continues below advertisement

பிக்பாஸ் போட்டியாளர்களான ரச்சித்தா மற்றும் ராபர்ட், இந்த சீசனின் ரொமாண்டிக் ஜோடிகளாக வளம் வருகின்றனர். தற்போது, இந்த இரு பறவைகளுக்கு இடையே சின்ன மனஸ்தாபம் ஏற்ப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரச்சித்தாவுக்கு மட்டும் ராபர்ட் மாஸ்டர் காட்டி வரும் கரிசனம், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் உரையாடும் வீடியோக்கள் பார்க்க கொஞ்சம் க்யூட்டாக இருப்பதனால், இவற்றை நெட்டிசன்கள் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ராபர்ட் மற்றும் ரச்சித்தா ஆகிய இருவரின் பெயரை சேர்த்து, ராபித்தா என்ற புது பெயரை உருவாக்கி இந்த ஜோடிகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏதோ உள்ளது என்பது தெரிந்தது, ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதுதான் விளங்கவில்லை. மற்றவர்களுக்கு காட்டும் அக்கரையை விட ரச்சிதாவிற்கு குடை பிடித்தும், அமருவதற்கு தலையனை கொடுத்தும் அன்பு மழை பொழிந்து வந்தார் ராப்ர்ட் மாஸ்டர்.

இப்போது, விக்ரமன் உடன் ரச்சித்தா பேசியுள்ளார். இந்த விஷயத்தால், ராபர்ட் மாஸ்டர் கடுப்பாகி விட்டார். அதனால், ஷிவின் இருவரிடமும் சென்று சமதானம் பேசுகிறார். முதலில்,  “ இதே போல் அனைத்து இடங்களிலும் எனக்கு பிரச்சனை நடக்கும். நான் எப்போதும் போல நார்மலாக தான் இருக்கிறேன். சாதாரணமாகதான் பேசினேன். இங்கு என்ன பண்ண முடியும், மாற்றி மாற்றிதான் பேசிக்கொள்ள முடியும். இது ஒரு கேம் அவ்வளவுதான்.” என்று ஷிவினிடம் புலம்பி தள்ளினார்

பின்னர், ராபர்ட் இடம் சென்ற ஷிவின், “உங்களுக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்களை ஒன்றாக வைத்து பேசாதீர்கள். அது அவருக்கும் நல்லது இல்லை, அவளுக்கும் நல்லது இல்லை. இனிமே இந்த வார்த்தையை விட கூடாது.” என கூறினார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் சரி என ஒப்புக்கொண்டார். ட்ரெண்டான இந்த வீடியோக்களின் கீழ், ”ஷிவின் ஏன் இருவருக்கும் இந்த வேலை பார்க்கிறார்” என்று மக்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : 6 சீசனில் இந்த வாரம் வெளியேற பரிந்துரைக்கப்பட்ட 7 பேர்!

Continues below advertisement