சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன புது திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை காணலாம்.
கலைஞர் தொலைக்காட்சி :
வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'சர்தார்'. ஸ்பை திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, யூகி சேது, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதே சேனலில் மாலை 6 மணிக்கு சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் டிவி :
வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6 மணிக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வரலாற்று சிறப்பு திரைப்படமான 'பொன்னியின் செல்வன் 2'. அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி படமாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மிகப்பெரிய திரை பட்டாளம் நடித்த இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
விஜய் டிவி :
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. நந்தமுரி பாலகிருஷ்ணா, ஹனி ரோஸ், ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று உலகளவில் வசூலை குவித்தது. சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தமிழ் டப்பிங் கடும் கிண்டலுக்கு உள்ளானது.
ஜீ தமிழ் :
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக காலை 10.30 மணிக்கு காஜல் அகர்வால், யோகி பாபு, ஜெய், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் முழு நீள காமெடி படமாக வெளியான 'கோஷ்டி' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. லாஜிக் இல்லை என்றாலும் முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த் டிவி :
ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு விதார்த், லட்சுமி ப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த 'பயணிகள் கவனத்திற்கு' திரைப்படம். மலையாளத்தில் வெளியான 'விக்ருதி' படத்தின் தமிழ் ரீ மேக் படமான இதில் சமூக வலைதளத்தின் சக்தி என்ன, அதன் தீங்கு என்ன, அதன் விளைவு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய படம்.
ஜீ தமிழ் :
ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 1.30 மணிக்கு 'ஆகஸ்ட் 16 1947 ' திரைப்படம். என். எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து கதையை அடிப்படையாக கொண்டு உருவான படம் சூப்பர் ஹிட் ஆனது.
கலர்ஸ் தமிழ் :
ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2 மணிக்கு ஹ்ருதூ ஹரோன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'குமாரி மாவட்டத்தின் தக்ஸ் ' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 2018ல் மலையாளத்தில் வெளியான 'ஸ்வாதந்தர்யம் அர்தராத்ரியில்’ படத்தின் தமிழ் ரீ மேக். சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயலும் ஒரு டீம் பற்றின கதை தான் இப்படம்.
இந்த சுதந்திர தின விடுமுறையை தொலைக்காட்சியில் பிரீமியர் செய்யப்பட உள்ள சூப்பர் ஹிட் படங்களை காண தவறாதீர்கள்.