மக்களிடம் தமிழ் சினிமா பிரபலமான காலக்கட்டத்தில் இருந்து நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் பல டைவர்ஸில்தான் முடிகிறது. இதனைத் திரையுலக பிரபலங்கள் ஒரு கலாச்சாரமாகவே மாற்றிவிட்டது


மக்களையும் சினிமாவையும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்று பின்னி பிணைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். தனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிறந்தநாள் தொடங்கி, திரைப்படம் வெளியாகும் நாள் முதல் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். முன்பிருந்த காலக்கட்டம் இல்லாமல் தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சிப்பெற்றுள்ளதால் சிறு விஷயம் நடந்தால் கூட அதனை உடனடியாக மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்ன?  சினிமாவில் காதலித்துத் திருமணம் முடிந்து சந்தோஷத்துடன் வாழ்ந்து வரும் அவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்து இருப்பதில்லை என்பது தான் வேதனையான விஷயம்.


குறிப்பாக புதிய பாதை திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்த  சீதா – பார்த்திபன் முதல் தற்போது சமந்தா- நாக சைதன்யா வரை என  பலர் விவாகாரத்து செய்திருக்கின்றனர். இந்த விஷயங்கள் தான் தற்போது மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. எனவே இந்நேரத்தில் தமிழ் திரையுலகில் விவாகரத்து செய்த தம்பதிகள் யார் யார் என்பதை சற்று நாமும்  நினைவு கூர்வோம்..



கமல்ஹாசன்:  உலக நாயகன் என அனைவராலும் அறியப்பட்ட கமல்ஹாசன், தனது முதல் வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது மனைவி சரிகாவுடன் சில காலம் வாழ்ந்து வந்த நிலையில் தான் இவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா என்ற இரு மகள்கள் உள்ள நிலையில் தான் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து நடிகை கவுதமியுடன் கமல்ஹாசன் சில காலம் வாழ்ந்து வந்த நிலையில் அவரைத் திருமணம் செய்யாமலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். அந்நேரத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


கவுதமி : நடிகை கவுதமி சந்தீப் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்ட சில வருடங்களிலே அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.


சீதா- பார்த்திபன்: புதிய பாதை திரைப்படத்தில் மலர்ந்த இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அழகாக சென்றுக்கொண்ட இவர்களின் திருமண வாழ்வில் மனக்கசப்பு ஏற்படவே இருவரும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் பிரிந்தனர்.



பிரபுதேவா: சிறந்த நடனக்கலைஞரும், நடிகருமான பிரபுதேவா ரமலத்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து சென்றனர்.


அரவிந்த் சாமி : 90-களில் பலரின் கனவுநாயகனாக வலம் வந்தவர் தான் அரவிந்த் சாமி. பல பெண்கள் தனக்கு அரவிந்த் சாமி போன்று தான் பையன் வேண்டும் என்று அடம்பிடித்த காலங்களெல்லாம் உண்டு. இவர் காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து 16 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு டைவர்ஸ் செய்துகொண்டனர்.


ராதிகா: தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் மூலம் அறிமுகமான ராதிகா, நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இரண்டாவதாக கணவர் ரிச்சர்ட் ஹார்டியுடன் திருமணம் செய்துகொண்டாலும் தற்போது இருவரையும் பிரிந்து சரத்குமாருடன் வாழ்ந்துவருகிறார்.


பிரகாஷ்ராஜ் :நடிகர் பிரகாஷ் ராஜ், லலிதா என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருவருக்கு பிரிந்தனர்.


ரகுவரன் : ரோஹிணி: காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ரகுவரன் – ரோஹினி ஆகியோர் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டனர்.


சரத்குமார்: நடிகர் சரத்குமாரும் சாயாவும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.


பிரசாந்த் : பிரசாந்த் மற்றும் கிரகலெட்சுமி ஆகியோர் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் கிரகலெட்சுமி ஏற்கனவே தான் செய்த முதல் திருமணத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நீதிமன்றமே இந்த திருமணம் செல்லாது என ரத்து செய்துவிட்டது.


ஏ.எல் விஜய் மற்றும் அமலா பால் 2014 திருமணம் செய்துக்கொண்ட நிலையில் கடந்த 2017 ல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.


நடிகை விந்தியாவும் கோபாலகிருஷ்ணனும் 2008 ல் திருமணம் செய்த பிறகு 2012 ல் விவகாரத்து பெற்றனர்.


வனிதா முன்பு நடிகர் ஆகாஷை மணந்தார். பின்னர் என்ஆர்ஐ மணந்தார். இருவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்.


ஸ்வர்ணமால்யா அர்ஜூன் ஜோடி கடந்த ப 2004 ல் விவகாரத்துப்பெற்றது.


ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும் 2000-இல் திருமணம் செய்தபின்னர்  2008ல் விவாகாரத்து செய்துவிட்டனர்.



செல்வராகன் சோனியா அகர்வால் ஆகிய இருவரும் காதல் கொண்டேன் திரைப்படத்தில் காதல் கொண்டு கடந்த 2006 ல் திருமணம் செய்திருந்தாலும் 3 ஆண்டுகளில் விவாகாரத்து பெற்றனர்.


அதேப்போன்று நடிகை சரிதா முதலில் தெலுங்கு நடிகர் வெங்கட் சுப்பையாவை மணந்தார். பின்னர் 1988ல் நடிகர் முகேஷை மணந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.


நடிகர் ராஜ்கிரண் செல்லம்மாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை பத்ம ஜோதியை திருமணம் செய்துக்கொண்டார். அதேபோன்று ரேவதி மற்றும் சுரேஷ் சந்திர மேனனும் ஆகியோர்  திருமணமான 15 ஆண்டுகளுக்குப்பிறகு பிரிந்துவாழ்கின்றனர்.



சமந்தா - நாக சைதன்யா: கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமந்தா நாக சைதன்யாவின் விவாகரத்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் தற்போது விவாகரத்து செய்துள்ளனர்.