மலையாளத்தில் வெளியான திரைப்படம் The Great Indian kitchen தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ராகுல் ரவீந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் அடக்குமுறை கலாச்சாரம் மற்றும் பெண்களை ஆண்களுக்கு அடிபணிய வைப்பதற்காக தலைமுறை தலைமுறையாக மரபுவழியாக திணிக்கப்பட்ட வழிமுறைகளை ரிப்பீட்டப் காட்சிகள் வழியாக படம் பேசுகிறது.
பெண்களை சமையல் செய்வதற்கும், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தும் ஆணாதிக்க தந்திரங்களையும், அதற்குப் புனித பிம்பங்களைப் புகுத்துவதைப் பற்றியும் படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜோ பேபி இந்த திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கினார். நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சாரமூடும் இணைந்து நடித்த இப்படம் ஓடிடி தளத்தில் அதிகமான வெற்றியைக் குவித்ததுடன், தேசிய அளவில் திரைவிமர்சகர்கள், ரசிகர்கள் இடையே பேசுபொருளானது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Really looking forward to starting work on this film:) <a >https://t.co/oP2iKORyGX</a></p>— Rahul Ravindran (@23_rahulr) <a >March 22, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். மசாலா மிஃஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது , காரைக்குடியில் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ள இப்படத்தைக் குறித்த அறிவிப்பை நடிகர் ராகுல் ரவீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .