நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிடும் ‛தி கிரே மேன்’(The Gray Man) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் பிரபல நடிகர் தனுஷ். "தி கிரே  மேன்" நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் அவென்ஜர்ஸ் பட இயக்குநர்களான ஆண்டனி, ஜோ ரூஸோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.


நெட்ஃபிக்ஸ்ஸின் மிகப்பெரிய பட்ஜெட் படமான "தி கிரே மேன்' மார்க் கிரீனியின் அதே பெயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் 'தி கிரே மேன்' நடிகர்களாகத் தலைமை தாங்குகிறார்கள், அனா டி அர்மாஸ், வாக்னர, ஜூலியா பட்டர்ஸ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக் மற்றும் ஆல்ஃப்ரே வூடார்ட் ஆகியோர் நடிக்கின்றனர்.


இந்தநிலையில், கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி அர்மாஸ் மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் தனுஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான 'தி கிரே மேன்' படத்தின் ட்ரைலரை 'நெட்பிலிக்ஸ் இந்தியா' தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 




ட்ரைலரின் தொடக்கம் முதலே அதிரடி சரவெடியாய் வெடிக்க, கேப்டன் அமெரிக்கா ஹீரோ கிறிஸ் எவன்ஸ் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி மிரட்டுகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் தனுஷ் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெற்று இருப்பது சிறிது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், படத்தில் இவர் வரும் காட்சிகள் விசில் பறக்கும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. ட்ரைலரின் இறுதியில் தனுஷ் என்று வரும்போது நம்மை அறியாமல் புல்லரிக்க செய்கிறது. 






மேலும், இந்தப்படம் ஜூலை 22 அன்று நெட்பிலிக்ஸில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண