ரோந்து பணி:


சென்னை ஓட்டேரி பகுதியில், போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் மங்களபுரம் பகுதி டீக்கடையில், 3 பெரிய பார்சல்களுடன் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது இருவரும் ஓட ஆரம்பித்தனர்.


கஞ்சா கண்டுபிடிப்பு:




தப்பி ஓடிய இருவரில் ஒருவரை, போலீசார் துரத்தி பிடித்தார். மேலும் அங்கு இருந்த பார்சல்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று பார்சல்களில், 44 கிலோ கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணை:


 இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான தினேஷ்  என்பது தெரிய வந்தது. இவர் நேற்று அதே ஊரை சேர்ந்த யோக ராஜ், மோகன், இந்துமதி, பிரகாஷ் ஆகிய நபர்களுடன் சொகுசு கார் மூலம் சென்னைக்கு வந்ததுள்ளனர். அதன்பிறகு அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில் பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் வந்து காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் காலை 4 மணிக்கு மூன்று பார்சல்களில் கஞ்சாவை கொண்டு வந்த மர்ம நபர்கள், இவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கஞ்சாவை  எடுத்துக்கொண்டு எதிரே இருந்த டீக்கடையில் வைத்துவிட்டு, காரை மற்ற நபர்கள் எடுத்து வரும் வரையில் காத்திருந்தபோதுதான் போலீசார் வந்துள்ளார்.


தலைமறைவு:


தினேஷ் போலீசில் சிக்கிய தகவல் தெரிந்தவுடன், காருடன் வந்த நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆந்திராவிலிருந்து வரும் கஞ்சாவை, கார் மூலம் சேலத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட தினேஷிடம் கஞ்சா கடத்தல் குறித்து, ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Also Read:அயன் படத்தை மிஞ்சும் கடத்தல்கள்.. இப்படியுமா யோசிப்பாங்க? விமான நிலையத்தில் சிக்கும் தங்கம்!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்