யுவன் ஷங்கர் ராஜா
ஒருபக்கம் இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் இருவரின் இசை தமிழ் ரசிகர்களை காலம் காலமாக ஆக்கிரமித்து வருகிறது என்றால். இன்னொரு பக்கம் 90 கிட்ஸ்களின் மத்தியில் பெரியளவில் தாக்கம் செலுத்தியவர் யுவன் ஷங்கர் ராஜா. திரையிசைப் பாடல்களில் ராக் இசை , ராப் பாடல்களை அதிகளவில் அறிமுகப்படுத்தியவர் என யுவனை சொல்லலாம். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த யுவனின் எக்கச்சக்கமான பாடல்கள் ரசிகர்களிடன் ஆல் டைம் ஃபேவரேட் பாடல்களாக இருந்து வருகின்றன. தற்போது விஜயின் தி கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன்.
தி கோட் பட பாடல்கள்
தி கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவனின் இசையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படத்தின் ஒரு சில பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. அதன்பிறகு அடுத்தடுத்து வெளியாகிய தி கோட் பட பாடல்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. விஜயின் முந்தைய படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் பெரியளவில் வைரலாகிய நிலையில் யுவனின் இசை கேள்விக்குட்படுத்தப்பட்டன. யுவன் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பல்வாறாக கருத்துக்கள் பதிவிடப் பட்டன.
இது குறித்து தி கோட் படத்தின் இயக்குநர் தன் சார்பில் விளக்கமளித்திருந்தாலும் யுவன் தரப்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் இதுவரை வரவில்லை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா தன் மீதான் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்
பேசுற வாய் பேசத்தான் செய்யும்
“ நான் இசையமைத்த முதல் சில படங்கள் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து என்னை ஃப்ளாப் இசையமைப்பாளர் என்று முத்திரை குத்திவிட்டார்கள். இதனால் நான் நிறைய யோசிக்கத் தொடங்கினே. என்ன தப்பு செய்கிறோம் என்று யோசித்து நிறைய அழுதிருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் கடந்து இன்று நான் உங்கள் முன் நிற்கிறேன். நான் சொல்ல வரும் ஐடியா என்னவென்றால் பேசுற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும் . அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் நாம் நம் வேலையை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும் , ஹேட்டர்ஸ் உங்களை கீழ் தள்ளிவிட தான் நினைப்பார்கள் ஆனால் நிங்கள் உங்கள் தலையை நிமிர்ந்து தான் நடக்க வேண்டும் . இவர்கள் பேசுவதை எல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டிருந்தால் நான் இத்தனை வருடம் என்னால் தாக்குபிடித்திருக்க முடியாது. இந்த மாதிரியா நெகட்டிவ் கருத்துக்களுக்கு என் காதுகளை நான் முடிதான் வைத்திருக்கிறேன்.” என்று யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.