The Crown: மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம் இது... பிரபல நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் இயக்குநர் நெகிழ்ச்சி!

முன்னதாக பிரபல தனியார் இதழுடன் பேசிய அவர், ”க்ரவுன் தொடர், மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம்" எனத் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றை  மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ’த க்ரவுன்’ நிகழ்ச்சி சில காலத்துக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

எலிசபெத் இளவரசியிலிருந்து மகாராணியாக உருவெடுப்பது, இங்கிலாந்து அரச குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பிரபல நெட்ஃபிளிக்ஸில் தொடர் ’த கிரவுன்’. 

எம்மி விருதுகள் வென்ற இந்த சீரிஸின் ஆறாவது சீசன் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து ’த கிரவுன்’ தொடரின் எழுத்தாளர் பீட்டர் மோர்கன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக டெட்லைன் இதழுடன் பேசிய அவர் "க்ரவுன் தொடர், மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் த க்ரவுன் சீசன் 6-இல் தயாரிப்பை ஒரு மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரியாதை நிமித்தமாக சில நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் தொடரின் குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை க்ரவுன் தொடரின் நான்கு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகைகள் கிளேர் ஃபோய், ஒலிவியா கோல்மன் இருவரும் இத்தொடரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக நடித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola