அமேசான் ப்ரைமில் (Amazon Prime) வெளியான பிரபலமான ‘தி பாய்ஸ்’ வெப் தொடரின் நான்காவது சீசன் (‘The Boys’ season 4 trailer) ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


’தி பாய்ஸ்’ சீசன் 4 


கடந்த 2019 -ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான ‘தி பாய்ஸ்’ முதல் சீசன் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரில் நடித்த கார்ல் அர்பன் நடித்த பில்லி பட்சர் (Billy Butcher) கதாபாத்திரமும், ஆண்டனி ஸ்டார் நடித்த ஹோம்லேண்டர் (Homelander) கதாபாத்திரமும் பிரபலமடைந்தன. ’தி பாய்ஸ்’ தொடரின் 4-வது சீசன் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தி பாய்ஸ் சீசன் 4-ன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மிரட்டும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


சூப்பர்ஹீரோ கதை பிடிக்கும் என்பவர்கள் இதை நிச்சயம் முதல் மூன்று சீசன்களில் இருந்து பார்க்கலாம். முதல் மூன்று சீசன்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ’Anti-superhero’ சூப்பர்ஹீரோ கதை. Garth Ennis, Darick Robertson ஆகியோரின் ' தி பாய்ஸ் ’   காமிக்ஸ்-ன் அடிப்படையில் வெப் தொடராக எடுக்கப்பட்டுள்ளது. 


பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன் என டி.சி. மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இந்த வெப் தொடர் மிகவும் பிடிக்கும். இந்த வெப் தொடரில், சூப்பர் ஹீரோக்கள் எல்லாருமே சூப்பர் ஹீரோக்களுக்கு வேலை பார்ப்பவர்கள்.  அந்த நிறுவனம் இவர்களை போலியாக மார்க்கெட்டிங் செய்யும்.  இப்படி செய்யும் நிறுவனத்தையும் அதன் சூப்பர்ஹீரோக்களின் செயல்களையும் மக்களின் வெளிச்சத்து கொண்டு வருவார்கள்,  'தி பாய்ஸ்' குழுவினர்.  ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டையில் மிரட்டியிருப்பார்கள். 


’தி பாய்ஸ்’ சீசன் 4 ட்ரெய்லரில் ரத்தம் தெரிக்க மிரட்டியிருக்கிறார்கள். 


’தி பாய்ஸ்’ சீசன் 4 ட்ரெய்லர் லிங்க்..





மேலும் வாசிக்க..Election Results 2023 LIVE: ஆட்சி மாறுவதால் தெலங்கானாவில் காட்சி மாற்றம் - காங்., தலைவரை சந்தித்த காவல்துறை டிஜிபி