69வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இசை, பாடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான விருதை அலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பெற்றுள்ளனர். சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்ததால் அல்லு அர்ஜூனிற்கு வழங்கப்பட்டுள்ளது. 


மாதவன் நடித்த ‘ராகெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ சிறந்த படத்துக்கான விருதையும், சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ படம் பெற்றுள்ளது. இதில் ராஜமவுளி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 6 விருதுகளை வென்றுள்ளது. 2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதில் வெற்றிப்பெற்றோர் பட்டியல் இதோ.... 


சிறந்த திரைப்படம்     : ராக்கெட்ரி ( இந்தியில்)
சிறந்த இயக்குநர்        : நிகில் மஹாஜன் மற்றும் கோதாவரி
சிறந்த பொழுதுபோக்கிற்கான பிரபலமான திரைப்படம் : ஆர்ஆர்ஆர்
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ்
சிறந்த நடிகர் : அல்லுர் அர்ஜூன்( புஷ்பா தி ரைஸ்)
சிறந்த நடிகை : அலியா பட் ( கங்குபாய் கத்தியவாடி), கீர்த்தி சனோன்  ( மிமி)
சிறந்த துணை நடிகர் : பங்கஜ் திரிபாதி ( தி காஷ்மீர் ஃபைல்ஸ்)
சிறந்த துணை நடிகை: பல்லவி ஜோஷி ( தி காஷ்மீர் பைல்ஸ்)
சிறந்த படத்தொகுப்பு ( ஒரினல்) : நாயாட்டு 
சிறந்த படத்தொகுப்பு : கங்குபாய் கத்தியவாடி
சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்) : தேவி ஸ்ரீ பிரசாத் ( புஷ்பா)
சிறந்த பின்னணி இசை : எம்.எம்.கீரவாணி ( ஆர்.ஆர்.ஆர்.)
சிறந்த பின்னணி பாடகர் : கால பைரவா, ஆர்.ஆர்.ஆர்( தெலுங்கு)
சிறந்த பின்னணி பாடகி : ஸ்ரேயா கோஷல் ( இரவின் நிழல்)
சிறந்த பாடல் வரிகள் : சந்திரபோஸ் 
சிறந்த சவுண்ட் எஃபெக்ட் : அருண் அஷோக் மற்றும் சோனு கேபி
சிறந்த நடன இயக்குநர்: பிரேம் ராக்‌ஷித் ( ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : அவிக் முகோபாத்யாயா( சர்தார் உதம்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : வீரா கபூர் ( சர்தார் உதம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் : ஸ்ரீனிவாஸ் மோகன், ஆர்.ஆர்.ஆர்.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சர்தார் உதம்
சிறந்த படத்தொகுப்பு : கங்குபாய் கத்தியவாடி 
சிறந்த ஒப்பனை: பிரீத்திஷீல் சிங் ( கங்குபாய் பத்தியவாடி)
சிறந்த சண்டை கலைஞர் : கிங் சாலமன், ஆர்.ஆர்.ஆர்.


ஸ்பெஷல் ஜூரி விருது: ஷெர்ஷா, விஷ்ணுவர்தன்
சிறந்த கன்னட திரைப்படம் : 777 சார்லி
சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம்
சிறந்த குஜராத்தி திரைப்படம் : செல்லோ ஷோ
சிறந்த தமிழ் திரைப்படம் : கடைசி விவசாயி
சிறந்த தெலுங்கு திரைப்படம் உப்பெனா
சிறந்த அருணாச்சல் திரைப்படம் : பூம்பா ரைட்
சிறந்த அசாம் திரைப்படம் : அனூர்
சிறந்த பெங்காலி திரைப்படம் : கல்கோக்கோ
சிறந்த இந்தி படம் : சர்தார் உதம்
சிறந்த மராத்தி திரைப்படம் : ஏக்டா கை ஜலா


திரைப்படம் இல்லாத வகையில் விருது:


சிறந்த திரைப்படம் இல்லாத படம் : ஏக் தா கவோன் 
சிறந்த இயக்குநர் : பகுல் மதியானி (ஸ்மைல் பிளீஸ்)
சிறந்த குடும்ப பின்னணி படம் : சந்த் சான்சே
சிறந்த ஒளிப்பதிவாளர் : பிட்டு ராவத் 
சிறந்த துப்பறிவாளும் திரைப்படம்: லுக்கிங் ஃபார் செலான்
சிறந்த கல்விக்கான படம் : சிற்பிகளின் சிற்பங்கள் ( தமிழ்)
சிறந்த சமூக பிரச்சனை சார்ந்த படம் : மித்து தி, த்ரீ டூ ஒன்
சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் - முன்னம் வளவு ( மலையாளம்)