கரூரில் வரைவு ஒட்டுச்சாவடி மையங்களை வெளியிடப்படும் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காலை 11:45 மணிக்கு ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் வரைவு ஓட்டு வாங்குவதற்கு சாவடி மையங்களை வெளியிடப்பட உள்ளதாக அனைத்து கட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் காலை 11:30 மணிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தந்து கூட்டணியில் காத்திருந்தனர். தொடர்ந்து தேர்தல் பிரிவு சார்ந்த அதிகாரிகளும் அந்த அறையில் காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரம் மேலாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டரங்கிற்கு வராததால் அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் புலம்பியபடி கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த அதிமுக அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து அதிமுக மாவட்ட தலைவர் திருவிகா கூறியதாவது: முதலில் நிகழ்ச்சி 12 மணிக்கு நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கிற்கு வந்து விடுவார். இதனால் நீங்களும் விரைவாக வந்து விடுங்கள் என அழைப்பேசி மூலம் தெரிவித்துள்ளனர். அதன்படி அதிமுக நிர்வாகிகளுடன் 11:30 மணியளவில் கூட்டரங்கிற்கு வந்தோம். ஆனால் பன்னிரண்டு முப்பது மணி அளவில் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கிற்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் கூறப்படவில்லை. அரசியல் கட்சிக்கு மதிப்பு அளிக்காத மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து இந்த கூட்டரங்கிற்கு இருந்தும், இந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளிநடப்பு செய்யலாம் என அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நாங்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து விட்டோம் இவ்வாறு அவர் கூறியிருந்தார். பகல் 12:45 மணிக்கு கூட்டரங்கிற்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதால் அவற்றை முடித்துவிட்டு இங்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கூட்டரங்கிற்கு வருவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக தவிர மற்ற திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இங்கு கலந்து கொண்டு வரைவு ஒட்டு சாவடி மையங்கள் வெளியிடப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.