தந்தி குழுமத்தின் புதிய துவக்கம்


1942 ஆம் ஆண்டு முதல் செய்தித் துறையில் இருந்து வருகிறது தந்தி குழுமம் . கோடிக் கணக்கான மக்களுக்கு அன்றாட செய்திகளை தினத்தந்தி நாளிதழ் வழங்கி வருகிறது . சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் இதழியல் மொழியை எளிமையாக்கிய நாளிதழ்களில் முதன்மையான பங்கு வகிக்கிறது. அரசியல் , பொழுதுபோக்கு , விளையாட்டு என எல்லா தளங்களிலும் செய்திகளை வழங்கி வருகிறது . நாளிதழ் தவிர்த்து தந்தி டிவி என்கிற சாட்டலைட் சேனல் ஒன்றையும் இணையதளம் ஒன்றும் தந்தி குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. இப்படியான நிலையில் தற்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டும் உள்ளடக்கிய தந்தி 1 என்கிற புதிய சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறது தந்தி குழுமம். இதன்படி வரும் மே 19 ஆம் தேதி தந்தி 1 சேனல் துவங்கப் பட இருக்கிறது.  தந்தி 1 சேனல் மூலம் GEC (Geneal Entertainment Channel) எனப்படும்  பொழுபோக்கு துறையில் அடியெடுத்து வைக்கிறது தந்தி குழுமம். மேலும் தந்தி 1 என்கிற மொபைல் செயலி மற்றும் புது அப்டேகளை தெரிந்துகொள்ள யூடியும் சேனல் ஒன்றும் தொடங்கப் பட இருக்கிறது. 


தந்தி 1


ரியாலிட்டி ஷோ , பொது விவாதங்கள் , கலை , ஆன்மிகம் , என பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிபரப்பாக இருக்கின்றன இந்த புதிய சேனலில் பல்வேறு பிறமொழித் தொலைக்காட்சித் தொடர்கள் டப்பிங் செய்யப் பட்டு வெளியாக இருக்கின்றன. தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின் ’பாலகிருஷ்ணா’ , கணபதியே வருவாய் , வீர ஆஞ்சநேயா ’ போன்ற பக்தி நிகழ்ச்சிகள் இந்த சேனலில் இடம்பெற இருக்கின்றன.






மேலும் இளவரசி போன்ற சரித்திர நாடகங்களையும் தாமரை , செல்லமே உள்ளிட்ட நாடகங்களையும் தந்தி 1 சேனலில் பார்க்கலாம். அலெக்சாண்டரை விரட்டியடித்த இந்திய மாவீரன் போரஸ் பற்றிய நாடகம் ,  அடுத்தடுத்து பல புதிய தொடர்களை உள்ளடக்குவதற்கான திட்டத்தில் வேலை செய்து வருகிறது தந்தி 1 இன் நிர்வாகக் குழு.






ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!