தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மே மாதம் தொடங்கியது முதலே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)


குன்னூர் (நீலகிரி மாவட்டம்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) தலா 17, குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி மாவட்டம்) 14,  உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), மஞ்சளார் (தேனி மாவட்டம்) தலா 9, சிவகிரி (தென்காசி மாவட்டம்), கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), பர்லியார் (நீலகிரி மாவட்டம்), மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) தலா 8, அழகரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்), மயிலாடி (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7 செ.மீ மழையும்,  


ஆதார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), கிண்ணக்கொரை (நீலகிரி மாவட்டம்), தேவாலா (நீலகிரி மாவட்டம்), பொதுப்பணித்துறை (திருப்பூர் மாவட்டம்), ராமநதி அணை பிரிவு (தென்காசி மாவட்டம்), ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி,  கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்   மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.