தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விக்ரம் , பார்வதி திருவொத்து , பசுபதி , மாளவிகா மோகனன் , டேனியல் காலடாகிரோன் , முத்துக்குமார் ,ஹரி கிருஷ்ணன், வேட்டை முத்துக்குமார் , அர்ஜூன் , சம்பத் ராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. கிஷோர் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதும் ஆர் கே செல்வா படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.


எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் இருவரும் படத்தின் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்கள். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு  தங்கலான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.






விக்ரமின் 61 ஆவது படமாக உருவாகி இருக்கும் தங்கலான் படம் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்னாடகா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.


கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது தங்கலான்.


ஹிட் தருவார்களா ரஞ்சித் விக்ரம் கூட்டணி?



பா ரஞ்சித் இயக்கத்தில் முன்பாக வெளியான சார்பட்ட பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியான காரணத்தினால் இப்படத்தை திரையரங்கில் கொண்டாடும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதற்கு அடுத்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  


அதே நேரம் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியை தழுவியது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்  இரண்டு பாகங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. ஆனால் விக்ரம் சோலோவாக களமிறங்கி வெற்றிக் கண்டு சில வருடங்கள் கடந்துவிட்டன.


மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் தங்கலான் படம் இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்புவது குறித்தும் படக்குழுவினர் விவாதித்து வருகின்றன