நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், ஷோபனா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD' (Kalki 2898AD). மகாபாரத காவியத்தையும், அறிவியல் புனைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் வெளியாகி இருந்தது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் பான் இந்திய படமாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.


 



 


'கல்கி 2898 AD' திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவானது என கூறப்படும் நிலையில் படம் வெளியான முதல் நாளே உலகெங்கிலும் 191 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் படம் வெளியாகி 13 நாட்கள் கடந்த நிலையில், உலகெங்கிலும் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.


விரைவில் இப்படம் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Sacnilk.com தரவுகள் தெரிவிக்கும் தகவலின் படி கல்கி 2898 AD படம் வெளியான 13 நாட்களில் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 529.45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தனித்தனியாக 13வது நாளில் இந்தியில் 5.75 கோடியும், தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா 0.6 கோடியும்,தெலுங்கில் மட்டும் 2.05 கோடி ரூபாயும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஆனால் வைஜெயந்தி பிலிம்ஸ் அவர்களுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் திங்கட்கிழமையே படம் 900 கோடியை உலக அளவில் வசூலித்து விட்டதாகவும் இந்த இடத்தை பிடித்த 10வது இந்திய திரைப்படம் 'கல்கி 2898 AD) என்பதையும் தெரிவித்து இருந்தனர். 






 


படம் வெளியான முதல் வாரத்தில் இந்திய அளவில் 414 கோடி வசூல் செய்ததாகவும் அதில் இந்தி 162.5 கோடி, தெலுங்கு 212.25 கோடி, கன்னட 2.8 கோடி தமிழ் 23.1 கோடி, மலையாளம் 14.2 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த படங்களில் வரிசையாக ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த பட்டியலில் முதல் இடத்தில் ' தங்கல்' படம் உலக அளவில் ரூ. 2070.30 கோடிகளை வசூல் செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் - சாப்டர் 2, ஜவான் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வரிசையில் கல்கி 2898 AD படம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.


மேலும் படிக்க: Gautham Vasudev Menon: மம்மூட்டியுடன் ஷூட்டிங்கைத் தொடங்கிய கெளதம் மேனன்: ஸ்டைலிஷ் ஆக்‌ஷனா, ரொமாண்டிக் படமா?


HBD Shamili: 3 வயதில் தேசிய விருது.. ஆனால் நடிகையாக ஜொலிக்க முடியாத காரணம்.. ஷாமிலி பிறந்தநாள் ஸ்பெஷல்