தங்கலான் திரைப்படம் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’ பகுதிக்கான படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.


இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால்  படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. விக்ரமிற்கு காயம் குணமடைந்ததை அடுத்து அவர் மீண்டும் பட பிடிப்பில் இணைந்தார்.  தற்போது இறுதிக்கட்ட படபிடிப்பு நடந்து வருகிறது. இம்மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 


எதிர்பார்ப்பு 


இந்திய தொழிலாளர்களின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.  இதன் டைட்டில் லுக் வெளியாகியது. அதில் சாம்பல் பூசிய முகத்துடன், தங்கலான் லுக்கில் விக்ரம் மாஸாக இருந்தார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஆதிவாசி பெண்ணாக நடித்து வருகிறார். விக்ரம் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டக்கூடியவர். இதனால் விக்ரமின் இந்த வித்தியாசமான லுக் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. 


பொங்கலுக்கு வெளியாகும் தங்கலான்?


இந்த படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது, தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக தனக்கு மேக்கப் போடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்த மாளவிகா மோகனன். தங்கலான் படத்திற்காக தினமும் மேக்கப் போடுவதற்காக கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்திருந்தார். 


நடிகை பார்வதி கடந்த மாதம் தங்கலான் படத்தில் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்தார். இது குறித்து அவர் கூறும்போது, ‘பணம், புகழ் இதை எல்லாம் தாண்டி வேலை செய்த திருப்தியை இந்தப் படம் கொடுத்துள்ளது. உங்களைப் போலவே நானும் இந்தப் பயணத்தைத் திரையில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளேன்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


Udhayanidhi Stalin Gift: மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்..! மாமன்னன் தந்த அன்பு பரிசு..!


ABP exclusive: ஆட்கள் பற்றாகுறையால் திணறும் அரசு போக்குவரத்து கழகம்... பணிச்சுமையால் அவதியுறும் ஊழியர்கள்..!