இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் நான்கு பெண் படைப்பாளிகள் இயக்கியிருக்கும் கள்ளிப்பால்ல’ ஒரு டீ ஆந்தாலஜி இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.


பா ரஞ்சித் தயாரிப்பில் புதிய ஆந்தாலஜி






இயக்குநராக இருப்பது மட்டுமின்றி, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார் இயக்குநர் பா ரஞ்சித். திரைப்பட விழாக்கள், இசை நிகழ்ச்சி,  என பல்வேறு கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன . இப்படியான நிலையில் தங்கலான் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புது ஆந்தாலஜி “ கள்ளிப்பால்ல ஒரு டீ” இந்த ஆந்தாலஜியின் நான்கு பெண் இயக்குநர்கள் நான்கு கதைகளை இயக்கி இருக்கிறார்கள்.


’வடக்கு தெச’ , மங்கள வார்த்தை, இளவேனில் , பீரியட்ஸ் பொங்கல் ஆகிய நான்கு குறும்படங்கள் இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ளன. கனிஷ்கா.சி.இ , சினேகா பெல்சின் , அபிஷா, சிவரஞ்சனி ஆகிய நான்கு பெண்கள் இந்தப் படங்களை இயக்கியுள்ளார்கள். இந்த ஆந்தாலஜியின் சாந்தினி, சந்தோஷ் கிருஷ்ணா மற்றும் சுதீஷ் கிருஷ்ணன் ஆகியவர்கள் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்கள்.


கிரண் மயி மற்றும் விக்னேஷ்வரி ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ரேவா இந்த ஆந்தாலஜிக்கு இசையமைத்துள்ளார்.  இந்த ஆந்தாலஜி இன்று மாலை ஆறு மணிக்கும் நீலம் சோஷியல் யூடியுப் சானலில் வெளியாக இருக்கிறது. 


தங்கலான்


பா. ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். விகரம் , பார்வதி, மாளவிகா மோகனன், பசுபது உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்தப் படம் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. வரும்   நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் இப்படத்தின் ரிலீஸை படக்குழு முடிவு செய்ய இருந்தது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு தகவல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 




மேலும் படிக்க : Rajinikanth: “போகாத ஹாஸ்பிட்டலே இல்லை..மருத்துவ உதவியால் வாழ்றேன்” - ரஜினிகாந்த் பேச்சு!


Actor Karthi: ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி காரணமா? - உண்மையை சொன்ன பவா செல்லதுரை!