பார்வதி திருவொத்து
பூ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியவர் நடிகை பார்வதி திருவோத்து. தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . சினிமா தவிர்த்து தொடர்ச்சியாக தனது அரசியல் கருத்துக்களுக்காக கவனிக்கப்படுபவர் பார்வதி.
தனக்கு வரும் நிறைய கதைகளை கதாபாத்திர முக்கியத்துவம் இல்லாததால் நிராகரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கான ப்ரோமோஷன்கள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்வதி “சில இயக்குநர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையில் மட்டுமே அவர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரிதான் நான் தங்கலான் படத்திற்குள் நுழைந்தேன். திரைத்துறையில் வரும் பெரும்பான்மையான படங்கள் ஆண்களை மையப்படுத்திய கதையாக வருவது உண்மைதான்.
ஆனால் அதற்காக தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை நுழைக்க முடியாது” என்றார்
மேலும் இந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வதி திருவொத்து தன்னைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
டீ கடை வைத்திருப்பேன்
நேர்காணல் ஒன்றில், ஒரு வேளை பூ படத்தில் நடித்தபின் நீங்கள் கவனிக்கப்படாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
ஒருவேளை அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகள் உங்களுக்கு வராமல் இருந்திருந்தால் உங்கள் பிளான் பி என்னவாக இருந்தது என்று பத்திரிகையாளரின் கேள்விக்கு பார்வதி பதிலளித்தார். “நான் எதைப் பற்றியும் கவலையேபடவில்லை. எல்லா வேலையும் கண்ணியமானவைதான். இப்போது தான் இருக்கும் சினிமா துறையும் கண்ணியம் இல்லை என்றால், நான் இதில் இருந்து வெளியேறிவிடுவேன். எனக்கு சினிமா வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் ஒரு டீ கடை வைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய பிளான் பி ஆக இருந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Yogi Babu : "நீ வெளிய வா பேசிக்கலாம்" : பத்திரிகையாளரின் கேள்விக்கு சொடக்கு போட்டு ரிப்ளை செய்த யோகிபாபு