தமிழ்நாட்டில் ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக மீது இபிஎஸ் விமர்சனம்:
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என, நேற்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக போராட்டம் நடத்திய நிலையில் , போராட்டம் நடத்தியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் அதிகரிப்பால், கொலைகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை காங்கிரஸ் ஜெயக்குமார் மரண வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன.
”திமுக போராட்டம் இதுக்குத்தான்”
தமிழ்நாட்டில் திமுக மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். விலைவாசி உயர்ந்துவிட்டது. போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இதுதான் உண்மை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுக போராட்டம்:
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் மத்திய பாஜக அரசின் மூன்றாவது விதிமுறை அறிக்கை கடந்த 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பேரில், நேற்று திமுக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், ” தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், திமுக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இதுதான் உண்மை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Also Read: Karthi Chidambaram: ”வேடிக்கையா இருக்கு” ஈ.வி.கே.எஸ் எனது முழு உரையை கேட்டாரா? - கார்த்தி சிதம்பரம்