பிரிவு எவ்வளவு பாதிக்கும் தெரியுமா..?சமந்தாவுடன் விவாகரத்து பற்றி நாக சைதன்யா விளக்கம்

விவாகரத்திற்கு பின் தானும் சமந்தாவும் அவரவர் வாழ்க்கையை பார்த்து வருவதாகவும் ஒருவர் மேல் ஒருவர் நிறைய மதிப்பு வைத்திருப்பதாகவும் நடிகை நாக சைதன்யா தெரிவித்துள்ளார்

Continues below advertisement

நாக சைதன்யா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் முதல் மனைவி லக்‌ஷ்மிக்கு ஒரே மகனாக பிறந்தவர் நடிகை நாக சைதன்யா. நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா மற்றும் லக்‌ஷ்மி 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யா சமந்தா இடையில் காதல் உருவானது. இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். கோலாகலமாக நடந்த இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்தை அறிவித்தார்கள். 

Continues below advertisement

கடந்த 2024 ஆம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை ஷோபிதாவுக்கு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு நாக சைதன்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அப்போது சமந்தாவுடனான விவாகரத்து பற்றி நாக சைதன்யா வெளிப்படையாக சில விஷங்களை பேசியுள்ளார். 

சமந்தாவுடன் விவாகரத்து பற்றி நாக சைதன்யா

" நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் செல்ல விரும்பினோம். எங்களுக்கு இருவருக்கும் அவரவரின் தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. பரஸ்பரம் இந்த முடிவை எடுத்து நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறோம். இருவரின் மேல் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். இதற்கு மேலும் என்ன வேணும். எங்கள் முடிடை மக்களும் மீடியாவும் மதிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் எங்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள். ஆனால்  இது மக்களுக்கு தலைப்பு செய்தியாக மாறுவது தான் வருத்தப்படும் விஷயம். 

இது என்னுடைய வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை பிறகு ஏன் என்னை குற்றவாளி மாதிரி நடத்துகிறார்கள். இரு ஒன்றும் ஓவர் நைட்டில் எடுத்த முடிவு இல்லை.  இது எனக்கு ரொம்பவும் சென்சிட்டிவான டாபிக். நிறைய யோசித்த பிறகுதான் இந்த முடிவிற்கு நாங்கள் வந்தோம். ஏனால் நான் இப்படியான ஒரு குடும்பத்தில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றவர்கள் அதனால் இந்த மாதிரியான ஒரு சூழலில் இருந்து வருவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும். ஒரு தடவைக்கு 1000 தடவை யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். " என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola