விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'தமிழும் சரஸ்வதியும்'. இந்த சீரியலில் தமிழ் தம்பி கார்த்திக்காக நடித்து வருபவர் நடிகர் நவீன் வெற்றி. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் நவீன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். சமீபத்தில் அவருடன் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் குறித்தும் திரை வாழ்க்கை குறித்தும் ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.



காதலுக்காக இன்ஜினியரிங் படித்த நவீன் :


விஸ்காம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் படித்த ஏராளமான இளைஞர்களில் ஒருவரான நவீன் வேண்டா வெறுப்பாக காலேஜ் போன காலம் போய் சௌமியாவிற்காகவே ஆசைஆசையாய் காலேஜ் சென்றுள்ளார். காரணம் சௌமியாவை நவீனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. காதலிக்கும் சமயத்தில் காதலிக்காக அவர் செய்த லூட்டிகள், கிரிஞ்ச் மெமரிஸ் அனைத்தையும் பற்றி இப்போது நினைத்து பார்த்து வெட்கப்பட்டு கொண்டனர் நவீன் - சௌம்யா தம்பதி. கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 


ரொமான்ஸ் சீன் பார்க்க மாட்டேன் :


இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மிகவும் பொசசிவ்வாக இருப்பவர்கள். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக் - வாசு ரொமான்ஸ்   காட்சிகள் சற்று தூக்கலாகவே இருக்கும். இது குறித்து சௌம்யா பேசுகையில் "கார்த்திக் - வாசு சண்டை போடுற காட்சிகள் வந்தால் ரொம்பவும் ஜாலியா சீரியல் பார்ப்பேன். அதுவே அவங்க ரெண்டு பேரோட ரொமான்ஸ் சீன் வரப்போகுது என்று தெரிந்தால் சீரியல் பார்க்கமாட்டேன். டைரக்டர் குமரன் ரொமான்ஸ் காட்சிகளை ரொம்ப அழகா எடுப்பார்" என கூறினார். 


டப்பிங் அனுபவம் :


போல்ட்டா இருக்குறதால என்னோட வாய்ஸ் சௌம்யாவிற்கு ரொம்ப பிடிக்கும். சென்னை வந்த பிறகு தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அப்படின்னு ஒரு கேரியர் இருக்குறத தெரிய வந்தது. டப்பிங் என்பது மிக பெரிய உலகம். டப்பிங் செய்றவங்க எல்லாருக்கும் ஹேட்ஸ் ஆஃப். எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.


சத்யஜோதி பிலிம்ஸ் ஆபீஸ் உள்ள நுழைய வரைக்கும் தெரியாது நான் தனுஷ் சாருக்கு தான் டப்பிங் பேச போறேன் என்பது. 'பட்டாஸ்' படத்தின் கன்னட வெர்ஷனில்  தனுஷ் சாருக்கு நான் தான் வாய்ஸ் கொடுத்தேன். இரட்டை கதாபாத்திரம் என்பதால் டப்பிங் பேசுவது ரொம்ப சவாலாக இருந்தது. அவரோட பாடி லாங்குவேஜூக்கு ஏற்ற மாதிரி வாய்ஸ் கொடுத்தேன். அவருக்கு நல்லா மேட்ச் ஆனது என பலரும் பாராட்டினார்கள் என தனது டப்பிங் அனுபவம் குறித்து நெகிழ்ந்து பேசினார் தமிழும் சரஸ்வதியும் கார்த்திக்.