லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடிக்க, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கியிருந்ததாலும், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்ததாலும் மாஸ்டர் படத்தின் மேல் ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. போதாக் குறைக்கு பேட்ட படம் மூலம் புகழ் பெற்ற மாளவிகா மோகனன் இப்படத்தில் நாயகி என்பதால், அனைவருக்கும் இப்படத்தின் மேல் அதீத ஈர்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி படம் இருந்ததால், வசூல் ரீதியாக மாஸ்டர் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. 


கைதி படத்தில், “இவன் தலைய கொண்டு வருபவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டா” என கட்டை குரிலில் பேசி இளம் பெண்களின் மனதில் குடிகொண்ட அர்ஜூன் தாஸ் இதிலும் வில்லனாக வந்தார். தமிழில் மட்டுமன்றி, தெலுங்கு திரையுலகிலும் மாஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 


உலக அளவில் சாதனை:


ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ’மாஸ்டர்’ திரைப்படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை படைத்தது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம்  உலக அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் இடத்தை பிடித்துள்ளது. 2021ல் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் மாஸ்டர் திரைப்படம் 45வது இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாமல் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம்  என்ற பெருமையும் மாஸ்டர் படத்திற்கு கிடைத்தது.






ஜப்பானில் ரிலீஸ்!


 






படம் வெளியான ஒரு ஆண்டு கழித்து, மாஸ்டர் படம் தற்போது ஜப்பானில் வெளியாகியிருக்கிறது.




இப்படத்திற்கு, ஜப்பான் மொழியில் சென்சாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானில் வெளியாகியுள்ள தமிழ் படங்களில், மாஸ்டர் படம் மட்டுமே சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களுமே பெருமிதத்தில் உள்ளனர்.