தமிழ் , மலையாளம் , தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகை நித்யாமேனன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வெப்பம், ஓகே கண்மணி , காஞ்சனா 2, மெர்சல் , 24 என பல முக்கிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெர்னலிசம் படித்தவர் நித்யா மேனன். ஆனல் தனக்கு எப்போதும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களில் எனக்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துதான் நான் அதிலிருந்து பின்வாங்கிவிட்டேன். நான் பாசிடிவிட்டி இல்லாத இடத்தில் ஒருபோதும் இருக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் எப்போதுமே இதை பேசலாமா வேண்டாமா என பலமுரை யோசித்துதான் பேசுவீர்களா ? என கேட்ட கேள்விக்கும் நித்யாமேனன் சற்றும் யோசிக்காமல் ஆமாம் என பதிலளித்தார்.
” 10 வருடங்களுக்கு முன்புநான் முதன் முதலா தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பொழுது எனக்கு சின்ன வயது , அப்போது நான் வெகுளியாகவும் , நேர்மையாகவும் பேசியதை சில பத்திரிக்கையாளர்கள் பெரிதாக்கிவிட்டனர். அப்போது பிரபாஸ் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினர்.நான் பிரபாஸா யார் அவர் என கேட்டேன்..எனது வெகுளியான பேச்சை படக்குழுவினரும் அங்கு இருந்த ரசிகர்களும் ரசித்த நிலையில் , இதனை பத்திரிக்கையாளர் சர்ச்சையாக மாற்றிவிட்டார். என்னோட வெகுளித்தனத்தை அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க. நான் ஏதோ தப்ப பேசுன மாதிரியும் , ரொம்ப அரோகண்டாக இருப்பது போலவும் சித்தரிச்சாங்க. அது எனது மனநிலையை அது பெரிதும் பாதித்தது. இன்றளவும் என்னால் அதனை மறக்க முடியவில்லை , அந்த சம்பவம் என்னை மிகவும் மோசமாக தாக்கியது “ அதிலிருந்துதான் நான் எது பேசினாலும் பார்த்து பார்த்து பேசுவேன் “ என தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எப்போதுமே நித்யா மேனனுக்கு நம்பர் 1 என்ற அந்தஸ்து பிடிக்காதாம். போட்டி என்றாலே சிறுவயது முதலே பயப்படுவாராம். நித்யா மேனன் ஒரு பாடகி என்பது நமக்கு தெரியும் ஆனால் அவருக்கு தனியாக பாடுவது என்றாலே பயமாம் . கோரஸாக பாடிவதைத்தான் விரும்புவாராம். அதனால் தனக்கு நம்பர் 1 கதாநாயகி என்பதை விட கதாநாயகியே போதுமானது என்கிறார். பிடித்ததை செய்வதிலேயே தனக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்கிறார் நித்யாமேனன்.