Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு ரெடி...தளபதி 69 படத்தின் அந்த அப்டேட் வரப்போகிறது

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபத் 69 படத்தின் டைட்டி வரும் புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

தளபதி 69

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. ஒருபக்கம் தனது கட்சி மாநாடு , கட்சிப் பனிகள் என பயங்கர பிஸியாக இருக்கும் விஜய் மறுபக்கம் தனது கடைசிப் படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகி வருகிறது தளபதி 69. சதுரங்க வேட்டை , தீரன் , வலிமை , துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இப்படத்தை இயக்குகிறார் . பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 

Continues below advertisement

கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. சென்னை பிரசாத் லேபில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி அடுத்தகட்ட படப்பிடிப்புத் துவங்கியது. இந்த ஆண்டின் இறுதிவரை படப்பிடிப்பு காட்சிகள் தொடர இருக்கிறது.

ரீமேக் சர்ச்சை

இப்படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் தளபதி 69 படம் எந்த படத்தின் ரீமேக் இல்லை என்றும் இது எச் வினோத் சொந்தமாக எழுதிய கதை என்றும் சமூக கருத்துள்ள ஆக்‌ஷன் எண்டர்டெயினராக இப்படம் நிச்சயம் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

தளபதி 69 டைட்டில் ரிவீல்

கடந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடித்த தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டிற்கு தளபதி 69 படத்தின் டைட்டில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola