கெளதம் மேனன்
மின்னலே படத்தின் மூலம் தமிழிழ் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். தமிழ் படங்களில் பாரதிராஜா , செல்வராகவன் மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக காதல் படங்களில் புதுமையைக் காட்டியவர் கெளதம் மேனன். விவாகரத்து பெற்ற இருவர் மீண்டும் காதல் வயப்படுவது, ஈகோவினால், பொறுப்புகளால் காதலில் ஏற்படும் பிரச்னைகள், என காதலைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை தனது படங்களில் அழகாகக் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் தவிர்த்து கெளதம் மேனன் படங்களில் ஆக்ஷன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தனித்துவமானவை.
காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வின்னைத்தாண்டி வருவாயா , வாரணம் ஆயிஅம் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் கெளதம் மேனன் படங்கள் எப்போது பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன. தயாரிப்புகளில் ஏற்பட்ட நசடத்தை ஈடு செய்ய ஒப்பந்தத்தின் பெயரில் தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை இயக்கித் தருவது, படங்களில் நடிப்பது என சமாளித்து வந்தார்
கெளதம் மேனன் மம்மூட்டி கூட்டணி
கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் ரிலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வோ மலையாள திரையுலகம் பக்கம் திரும்பினார் கெளதம் மேனன். நடிகர் மம்மூட்டி நடிக்கும் Doninic and the ladies purse படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகியது. முன்னதாக இப்படத்தில் மம்மூட்டி போலீஸாக நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் கெளதம் மேனன் ஸ்டைலில் ஒரு செமையான காப் ஸ்டோரிக்கு தயாராகினர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் இப்படம் ஆக்ஷனா காமெடி படமா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரோ ஒருவன் ரவுடி சீனில் வரப்போகிறான். அவனை எப்படி மடக்கி எப்படி அடிக்க வேண்டும் என்று ஜாக்கி சான் ஸ்டைலில் மம்மூட்டி திட்டம்போடுகிறார். அவர் சொல்வது எல்லாம் சீரியஸா இல்லை இவர் ஒரு டம்மி பீஸா என்கிற லுக் விடுகிறான் பக்கத்தில் இருப்பவன். ரசிகர்களுக்கு கிட்டதட்ட இது காமெடி படமா ஆக்ஷன் படமா என்கிற சந்தேகமே எழுந்துள்ளது. என்றாலும் இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்