விஜய்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரின் தமிழ்க வெற்றிக் கழக கட்சி ப்போட்டியிட இருக்கிறது. தற்போது கட்சி பணிகள் , களத்தில் மக்களை சந்திப்பது, ஆளும் கட்சியை குறித்து விமர்சிப்பது என்று முழு அரசியல்வாதியாகவே மாறியுள்ளார் நடிகர் விஜய். அரசியலில் முழுவதும் களமிறங்கிய பின் திரைவாழ்க்கைக்கு விஜய் எண்ட் கார்டு வைக்கப் போகிறார். தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்
தளபதி 69
கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று , துணிவு போன்ற கமர்சியல் மற்றும் கதைக்களங்களையும் வைத்து வெற்றியையும் கொடுத்தவர் எச் வினோத்.
இவர் தற்போது தளபதி 69 படத்தின் கதையும் விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தளபதி 69 படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் தகவல் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த வித அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: கார் ரேஸ் விபத்து! நாங்க அலறிட்டோம்.. மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்னது இது தான்...
தளபதி 69 டைட்டில்?
தளபதி 69 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தற்போது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்படத்திற்கு விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு டைட்டிலை படக்குழு வைக்க திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை விட்டு விலகும் நிலையில் அவரது முதல் படத்தின் டைட்டிலை படக்குழு வைக்க இருப்பதாக பேசப்படுகிறது.
ஜனவரி 26 ஃபர்ஸ்ட் லுக்:
இந்த நிலையில் தளபதி 69-ன் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் ஒரு குட்டி அப்டேட்டை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் நடித்த அனைத்து படங்களின் டைட்டில்களையும் கொண்ட வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
மேலும் படத்தின் பெயர் நாளைய தீர்ப்பாக தான் இருக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.